" வணக்கம் ஹமீது தாத்தா..."
" அடடா... கிருஷ்ணமூர்த்தி பேரன் சந்துருவா? என்னப்பா... என்ன விசயம்"
" தாத்தா... தொழுகைக்காப் போறீங்க?"
" ஆமாம் சந்துரு. பள்ளிவாசல் பக்கத்தில தான் தொழுகை செய்யணும். உள்ளே போக முடியாது. கொரோனா கட்டுப்பாடு"
" தாத்தா... எங்களுக்காகவும் வேண்டிக்குங்க.."
" நம்ம எல்லாருக்காவும் அல்லாவிடம் தொழுகை செய்கிறேன்."
சந்துருவின் முதுகை தட்டிக் கொடுத்துவிட்டு பள்ளிவாசலை நோக்கி நடந்தார் ஹமீது.
அன்று மாலை வீட்டுவாசலின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவை திறந்தார் ஹமீது. வெளியே கிருஷ்ணமூர்த்தியும், சந்துருவும் நின்றிருந்தார்கள்.
" உள்ளே வாடா கிருஷ்ணமூர்த்தி. உட்காருடா... என்னடா திடீர்ன்னு வந்திருக்கே..."
"
இன்றைக்கு சந்துரு தான் சொன்னான். ஹமீது தாத்தாவை பார்த்தேன்னு. பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு போவதாய் சொன்னாருன்னு. இரண்டு மாசமாய் உனக்கு சரியான வேலை இல்லை. காரணம் இந்த கொரோனா பிரச்சனை. நாளை கழித்து மறுநாள் ரம்ஜான் வருது. அதான் உனக்கும் மனைவி பேரபிள்ளைகளுக்கும் புதிய துணி எடுத்து வந்தேன். வாங்கிக்க ஹமீது. இந்த ரம்ஜானை நல்லபடியாய் கொண்டாடு. நாங்களும் வருவோம்..."
" கிருஷ்ணமூர்த்தி... உன் மனசு எனக்கு தெரியும். நீ எது தந்தாலும் நான் வேண்டாம்ன்னு சொல்லமாட்டேன். காரணம் நம் நட்பு. இதை நீயே என் மனைவி ஆயிஸாவிடம் கொடுடா..."
அன்று இரவு தன் மனைவி ஆயிஸாவிடம்...
" ஆயிஸா... இன்றைக்கு பள்ளிவாசலில் அல்லாவிடம் நாளைக்கு ரம்ஜான். எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு என்று அழுதபடியே தொழுகை செய்ஞ்சேன். அல்லாஹ்வும் கிருஷ்ணமூர்த்தியின் மனசை காட்டிட்டாரு..."
சொன்ன ஹமீது இரு கரங்களை வானை நோக்கி நீட்டி நன்றி சொன்னார்.
0 Comments