கோடையில் மாம்பழங்களுக்கு பஞ்சமிருக்காது. சந்தைக்கு சென்றால் எந்த பக்கம் திரும்பினாலும் மாம்பழங்களில் கூவல் சத்தம் கேட்கும். அதை வாங்கி உண்பவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சமில்லை. அதன் சதையில் இருக்கும் சுவையை விட அதன் கொட்டை சதையை சிலர் விரும்பி உண்பார்கள். வீட்டில் மாம்பழம் அறிந்தால் கூட கொட்டை பீஸ் எனக்கு வேண்டும் என முந்தியடிப்பார்கள். அப்படியொரு சுவை உண்டு அந்த கொட்டை சதைக்கு..
அதன் சுவையில் இருக்கும் ரகசியமே அதன் கொட்டையில் நிறைந்திருக்கும் நன்மைகளால்தான் என்பது தெரியுமா உங்களுக்கு..? அதாவது மாம்பழக்கொட்டைகளின் விதைகளில் எண்ணற்ற நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இனி அதன் கொட்டைகளைக் கூட தூக்கி எறியாதீர்கள்.
பொடுகுத் தொல்லை நீங்கும் : மாங்காய் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பட்டர் பொடுகுத் தொல்லையை நீக்க உதவும். இதைப் பயன்படுத்துவதால் இளம் வயதில் ஏற்படும் நரை முடிப் பிரச்னையும் இருக்காது.
வயிற்றுப் போக்கு தொல்லை நீங்கும் : மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும்.
இதயப் பிரச்னை மற்றும் இரத்தக் கொதிப்பு குறையும் : மா விதை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும். இதன் அறிகுறிகள் இருந்தால் ஆரம்பநிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
ஆரோக்கியமான முடி : கொழுப்புச் சத்து, மினரல் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் மாங்கொட்டை விதை எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தும் தலைமுடி எண்ணெய்யுடன் கலந்து தடவி வரத் தலைமுடிப் பிரச்னைகள் அனைத்தும் குறையும்.
ஆரோக்கியமான சருமம் : மாங்கொட்டை விதையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதை முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாக இருக்கும். பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது : மாங்கொட்டை விதை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அவை குளுக்கோஸின் உறிஞ்சுதலைக் குறைக்க அவை குடல் மற்றும் கல்லீரலின் நொதிகளை மாற்றுகின்றன.
பற்கள் ஆரோக்கியம் : நீங்கள் நீண்ட நாட்களாக பல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது எதிர்காலத்தில் பல் பிரச்னைகளே இருக்கக்கூடாது எனில் மாங்கொட்டை விதைகளில் தீர்வு உண்டு. மாங்காய் இலைகள் சிலவற்றை தீயில் வாட்டி எடுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு இந்த விதைகளையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பின் இந்த கலவையை இரண்டு வேலை பற்களில் தேய்த்து கொப்பளித்துவர பல் பிரச்னைகள் சரியாகலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி : தற்போது உயிரை பறிக்கும் கொரோனாவில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகிறது. அந்த வகையில் மாம்பழ விதைகள் பாக்டீரியாக்களை அகற்றும் சக்தி கொண்டது. இதன் மூலம் சளி போன்ற தொற்றுநோய்களை அகற்றும்.
கண்கள் ஆரோக்கியம் : மா விதைகளில் வைட்டமின்-ஏ நிறைவாக உள்ளது. இது கண்ணின் விழித்திரையில் நிறமிகளை உருவாக்க உதவுகிறது. வயது செல்ல செல்ல கண்கள் மங்குவதைத் தடுக்க உதவுகிறது.
செரிமானத்தை தூண்டும் : மாங்கொட்டை விதைகள் உடலின் செரிமான ஆற்றலை தூண்டுகிறது. இதனால் செரிமானப்பிரச்னைகள் நீங்கும். அதோடு கொழுப்பு தேக்கத்தால் உண்டாகும் உடல் பருமனும் இருக்காது.
Tags:
ஆரோக்கியம்