
ரிஸ்வி முப்தி மீண்டும் அகில இலங்கை ஜாமியதுள் உலமா (ACJU)வின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இது இலங்கை முஸ்லிகளின் மத,பொருளாதார ,அரசியல் பின்னடைவை பிரதிபலிக்கின்றது
ரிஸ்வி முப்தி ஜமியதுல் உலமாவின் தலைவராக பல தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு சொந்தக் காரர் என்ற போதிலும் அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை முஸ்லிகளின் அனைத்துத் துரைகளிலும் இருக்கின்ற பின்னடைவைக் காட்டுகின்றது
அ.இ. ஜம்மிய்யத்துல் உலமா என்பது சுமார் 75 வருடத்துக்கு முன் சுமார் 10 பேர் கொண்ட உலமாக்களால் உருவாக்கப்பட்டது. அதற்கென சொந்த காரியாலயம் எதுவும் இல்லாமல் உறுப்பினர்களின் வீடுகளில் கூட்டம் நடந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இலங்கையின் பல பாகங்களுக்கும் விரிந்தது. ஆனாலும் ஜம்மிய்யா பாரிய அளவில் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை.
ஜம்மிய்யத்துல் உலமாவின் செயலாளராக 1960களில் மௌலவி எம். ஜே. எம். ரியால் (கபூரி) அவர்கள், நியமிக்கப்பட்டார்.அவருடைய காலமே ஜம்மிய்யத்துல் உலமாவின் பொற்காலமாகும்.
அவர் ஜம்மிய்யத்துல் உலமாவை காட்டி பணம் திரட்டுவதில் ஈடு படாமல் ஜம்மிய்யத்துல் உலமாவை அறிவு ரீதியாக கட்டியெழுப்பினார். தலை சிறந்த மார்க்க அறிவுள்ள உலமாக்களை இணைத்தார். அவரது கையில் இருக்கும் ஒரு பை மட்டுமே உலமா சபையின் காரியாலயமாக இருந்தது. அதற்குள் உலமா சபையின் முழு இயக்கமும் இருந்தது.இலங்கை வாழ் முஸ்லிம்களின் நலனில் கூடுதலாக அக்கறை கொண்டார்.
ஜம்மிய்யாவின் தலைவர் யார் என்பதை விட செயலாளர் மௌலவி ரியாழ் என்ற பெயரே அறிமுகமானது. அந்தளவுக்கு அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஜம்மிய்யாவை வளர்த்தெடுத்தார்
பின்னர் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் கொழும்பு ஒராபி பாஷா வீதியில் 6 அடி 10 அடி கொண்ட சிறிய காரியாலயம் ஜம்மிய்யாவுக்கு கிடைத்தது.
ஆனாலும் அந்த சிறிய காரியாலயத்தை வைத்துக்கொண்டு பாரிய பல வேலைகளைச்செய்தார்.
இந்நிலையில் 1970களில் காத்தான்குடி அப்துர்ரவூபின் அத்வைத கொள்கை நாட்டில் பெரும் பிரச்சினையை தோற்றுவித்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ஜம்மிய்யத்துல் உலமா கல்முனையில் மிகப்பெரிய விவாத மேடையை நடத்தியது. இந்நிகழ்வே ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு தேசிய ரீதியாக அறிமுகத்தையும் மக்கள் அவதானத்தையும் கொடுத்தது.
பின்னர் அந்தக்கூட்டம் கூச்சல் குழப்பம், கல்லெறி என முடிந்ததால் உலமா சபை முழு நாட்டிலும் அறிமுகமானதுடன் உலமா சபையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியத்தை உலமாக்களுக்கு கொடுத்தது.
அதன் பின் 1990களில் ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவராக மௌலவி முபாறக் மக்தூம் கபூரி நியமிக்கப்பட்டார். அவர் மதீனா பல்கலைக்கழக பட்டதாரி என்பதால் சவூதி அரேபிய தண்ணார்வு நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்களின் பள்ளி கட்டுதல், கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டார். செயலாளராக ரியாழ் மௌலவியும் செயற்பட்டார்.
பின்னர் 2000ம் ஆண்டளவில் ஜம்மிய்யாவின் பொதுக்கூட்டம் கொழும்பு ஸாஹிராவில் கூடியது. இதன் போது உலமா அல்லாத பல சண்டியர்கள் அத்துமீறி உள் நுழைந்து ரிஸ்வி முஃப்தி என்பவரை தலைவராக்க வேண்டும் என்றனர். இதற்கு கணிசமான உலமாக்கள் எதிர்த்த போதும் சண்டித்தனம் வென்றது.
இந்நிகழ்வில் சில உலமாக்களும் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.
அன்று வரை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கொஞ்சமும் அறிமுகமற்றிருந்த ரிஸ்வி முப்தி ஜம்மிய்யாவின் தலைவர் ஆனார்.
அதன் பின் முன்னாள் தலைவராக இருந்த மௌலவி முபாறக் மக்தூம் பெயருக்கு செயலாளர் ஆனார்.
ரிஸ்வி முப்தி ACJU கைப்பற்றியதிலிருந்து செல்வம் கொழிக்கும் ACJUவாக மாறியது .சாதாரண சைக்கிளில் பயணம் செய்த ACJU உறுப்பினர்களுக்கு விலை உயர்ந்த வாகனங்களைக் கொடுத்து தன அடி வருடிகளாக நிலை நிறுத்திக்கொண்டார்
20 ஆண்டுகளுக்கு முன்னர் ACJU தலைவர் ரியால் மௌலவியை வெளியேற்றி ஆட்சியை கைப்பற்றிய ரிஸ்வி முப்தி அன்றிலிருந்து ACJU ஒரு நபரின் ஆதிக்கத்தின் கீழ் ACJU செயல்படத்துவங்கியது.
ACJU என்பது மதராசா வழியாக சென்றவர்களின் சங்கம். ACJU க்கு இந்த அதிகாரம் சமூகத்தால் வழங்கப்படாததால் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பேசவோ அல்லது செயல்படவோ ஆணை இல்லை.
அதனால்தான் ரிஸ்வி முப்தியின் இஷ்டப்படி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து இலங்கை முஸ்லிம்களின் தலையில் கட்டி விடுகின்றார்,
முஸ்லிம்கள் அடிபட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு மத உரிமைகள் பறிக்கப்பகின்றடு சந்தர்ப்பம்களில் எல்லாம் ரிஸ்வி முப்தியை தேடவேண்டும்.முஸ்லிகள் கதறிக்கொண்டிருக்கும் போதெல்லாம் ரிஸ்வி முப்தி ஜனாதியிடம் அல்லது பிரதமரிடமோ ஆலோசனை நடாத்திக்கொண்டிருப்பார்.
அல்லது ராஜபக்ஷாக்களுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பார்.
1920 களின் நடுப்பகுதியில் சமூகத்தை வழிநடத்திய மரியாதைக்குரிய மனிதர்களாள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உருவாக்கப்பட்டது .
றிஸ்வி மௌலவி ACJU தலைவராக பதவியேற்றதிலிருந்து , சமூகத்தின் மத மற்றும் அரசியல் தலைவராக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள கையாளத் தொடங்கினார்.
இன்று ACJU தனிப்பட்டவரின் அமைப்பைப் போன்று செயல்படுகின்றது.
முஸ்லிகளுக்காக , ரம்ஜான், ஈகைப் பெருநாள் போன்ற விஷயங்களில் கூட தேவையற்ற சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற ACJU தலைவரை யாரும் கேள்வி கேட்கத் துணிவதில்லை.
காரணம் அரசியல் பலம் பண பலம் அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் .ACJU எப்பொழுதும் சமூகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைசமூகத்தில் இருக்கின்ற பெரியவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து முஸ்லிம்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதில் மிகவும் முக்கியமானது ஹலால் பிரச்சினையாகும்.
முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக இந்நாட்டில் இருந்துள்ளனர், குறிப்பாக உணவுப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஹலால் மற்றும் ஹராம் எது என்பதை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ACJU முற்றிலும் வணிகக் கோணத்தில் ஹலால் பிரச்சினையை உருவாக்கியது மற்றும் அது மற்ற சமூகங்களை கோபப்படுத்தியது.
எவ்வாறாயினும், ACJU இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில் அக்கறையற்ற அலட்சியம், அரசாங்கத்தையும் அதன் கைக்கூலிகளையும் முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிட வைத்தது. உதாரணமாக இன்று மதரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெண்களின் முகத்திரை மற்றும் திருமண வயதை 18 ஆக நிர்ணயம் செய்ய தடை விதித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்குப் பின்னர் மைத்திரி-ரணில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தீய பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. முஸ்லிம்களின் வியாபாரங்களில்.உணவில் .உடையில் கைவைக்கத் தொடங்கினார்கள்.
இனவாதிகளுக்கு சுதந்திரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தார்கள் அன்றைய அரசாங்கம்..இதன்மூலம் முஸ்லிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் ,அளித்தும் ,பல உயிகளைக் கொண்றும் இனவெறித் தாகத்தைத் தீர்த்துக்கொன்றார்கள் .
ஈஸ்டர் தாக்குதல் இலங்கை முஸ்லிகளுக்களின் வளர்ச்சியை மிகப்பெரும் பாதிப்பை உண்டுபண்ணியது.
ஹலால் சான்றிதழில் இருந்து தொடங்கி, முஸ்லிம் பெண்களின் உடை விவகாரம் மற்றும் மதரஸாக்களின் சீரமைப்பு போன்ற விடயங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது அசமந்தப்போக்காக இருந்தது ACJU.இதனால் முஸ்லிகளின் கடும் விமர்சங்குகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது .
ACJUவின் தவறான தீர்மானங்களுக்கு எதிராக் ஒருவர் கருத்து வெளியிட்டால் ,ACJU தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விளக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றார்கள்.இது முற்றிலும் தவறான ஓர் செயல் .
இலங்கை மக்கள் தொகையில் 9.7%வீதமாக இருக்கின்ற ஒரு சமூகத்தின் முக்கிய அமைப்புக்கு தனியாக ஒரு ஊடகம் இல்லை. மக்களுக்கு உண்மையான நிலைமையை விளங்கப்படுத்த ஒரு ஊடகம் இல்லாதிருப்பது வெட்கக்கேடான ஒரு விடயம் .
மதரசாக்கல் மூலம் முஸ்லிகளின் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண நினைக்கின்ற ACJU மடத்தனமான கொள்கைகளை படிதுக்கொடுக்கின்றனர்.
மதரசா என்பது ஒரு பாடசாலை என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.
பாடசாலைகளுக்கு திறமையான மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கவேண்டும்.அப்படியில்லாதபட்சத்தில் அப்படிப்பட்டவர்களை உருவாக்க வேண்டும்.
ஆனால் இன்று ACJUஆதரவாய் இருக்கின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.குரான் மனனம் செய்தவர்கள் மட்டும்தாம் மதரசாக்களில் ஆசிரியர்களாய் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
இதனால் அநேகமானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.ஹாபிஸாக வெளியேருபவர்கள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி படுமோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள், வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றவர்கள் அரபு நாடுகளுக்கு சென்று தொழில் புரிகின்றார்கள் .அதிலும் முக்கியமாக பள்ளிகளில் இமாமாகவோ அல்லது துப்பரவுத் தொழிளுக்காகவோதான் செள்கின்றார்கள்.
அப்படியே அவர்களுக்கு தொழில் கிடைத்தாலும் ஒரு பள்ளியில் அல்லது கடைகளில்தான் சேரமுடிகின்றது.நிலையான ஒரு வருமானம் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இவர்களது பயணம் தொடர்கின்றது.
இந்த நிலை கடந்த பல வருடங்களாக இலங்கையில் இயங்குகின்ற.ACJU இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை .அதற்குக் காரணம் இருக்கின்றது
இந்த தலைமைப் பதவி ரிஸ்வி முப்திக்கு நேர்மையாக கிடைத்ததல்ல என்பதை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் அறிவோம்.
ரவ்டித்தனத்தால் அபகரிக்கப்பட்ட தலைமைப் பதவியில் ரிஸ்வி முப்தி அவர்கள் வீற்றிருப்பது எமது மக்களுக்கு தெரியுமோ இல்லையோ என்று தெரியவில்லை. (ரிஸ்வி முப்தி இந்த தலைமைப் பதவியை எப்படி பெற்றுக்கொண்டார் என்ற விளக்கம் மேலே குறிப்பிட்டுள்ளேன்)
மதரசாக்களில் பொதுக் கல்வியைக் கொடுத்து பல மொழிகளையும் கற்றுக் கொடுத்தால் எதிர்காலத்தில் எதிர்த்து நிற்பார்கள் என்ற அச்சமோ என்னவோ?
இவர்கள் அறிஞர்களை உருவாக்குவதை விட்டு மதரசாக்களில் மதகுருமார்களை உருவாக்கும் முயற்சியில் மட்டுமே இருக்கின்றார்கள்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் மன நிறைவோடு செய்வதில்தான் உறுதியான எதிர்காலம் இருக்கும் .என்றாலும் இப்படி எவ்வளவு காலம்தான் எமது பிள்ளைகளை உலகக் கல்வி தெரியாதவர்களாக வளர்த்து தொழில்நுட்ப உலகில் நடமாட வைப்பது.?
எதிர்வரும் காலங்கள் மிகவும் கடுமையானதாய் இருக்கும் ,தொழில்நுட்பம் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையோடும் இடியப்ப சிக்கல்போல் இணைந்திருக்கும் .அந்த சிக்கல்களில் எது தேவை எது தேவையற்றது என்று தெரிவு செய்து வாழ்கையை நகர்த்தும் ஆற்றல் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமாகிவிடும்.
அதற்கு ஏற்றாற்போல் நமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லவேண்டும் .
அதற்குரிய முறையில் திறமையான ஆசிரியர்களை மதரசாவிற்கு நியமிக்கவேண்டும்.
முஸ்லிகளின் மதவிவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும்
1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத விவகாரங்களில் தலையிடவில்லை.
மாறாக முஸ்லிம்களின் மத உரிமைகளை மதித்தார்கள். சிங்கள அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் பிக்குகள் கூட, சில இனவாத கைக்கூலிகளைத் தவிர, முஸ்லிம்களின் மத உரிமைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நடந்துகொண்டார்கள்.
எவ்வாறாயினும், ACJU இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில் அக்கறையற்ற அலட்சியம், அரசாங்கத்தையும் அதன் கைக்கூலிகளையும் முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிட வைத்தது. உதாரணமாக இன்று மதரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெண்களின் புர்கா மற்றும் திருமண வயதை 18 ஆக நிர்ணயம் செய்ய தடை விதித்தார்.
இவை அனைத்தும் ACJU வின் அலட்சியத்தால் ஏற்பட்டவை .அரசாங்கமும் இனவாதிகளும் மத உரிமைகளில் தலையிடும்போது அதை எதிர்கொள்ள ACJU அங்கம் வகிக்கின்ற எவருக்கும் தைரியமில்லை ..ஆனால் பௌத்த பிக்குகள் முஸ்லிம் பெண்களின் புர்காவை தடை செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.ACJUவினால் அப்படி ஒரு அறிக்கைகூட கொடுக்க முடியாமல் இருந்தது .
வடகிழக்கு, குருநாகல், நிகக்வரட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீதான கும்பல் தாக்குதல்களை தடுக்க அரசாங்கம் தவறிய போதிலும், முஸ்லிம்களின் துன்பங்களுக்கு மத்தியிலும், ரிஸ்வி முப்தி ஜூன் 3 அன்று ஜனாதிபதி சிறிசேனவின் இப்தார் விருந்தில் கலந்து கொண்டார்.
முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தில் முன்னணியில் இருக்கும் அவுத்துரலியே ரத்தின தேரரால் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட பதற்றம் காரணமாக கதவுகளை மூடி ரமழான் நோன்பை விடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார் ரிஸ்வி முப்தி .
இதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சீற்றம் அடைந்தனர் ஆனால் இந்த அவமானத்தைத் தடுக்க முடியாமல் திணறினார் ரிஸ்வி முப்தி.
இப்படி ரிஸ்வி முப்தியின் வரலாறு நீளமானது.
இவர் இலங்கை முஸ்லிம்களுக்காக செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் ....
ராஜபக்ஷாக்களைப்போன்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு அடம்பிடிப்பதை தவிர்த்து புதிய ,படித்தவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் .
(பத்திரிகைகளில் வந்த தகவல்களும் சேத்துக்கொள்ளப்பட்டுள்ளது)
கல்ஹின்னை மாஸ்டர்


1 Comments
A failed leader is a disaster. A failed country with a leader is a dead nation. In this, we have a lair and unconditional failing leader for our community, causing more harm than good. This is nothing but more destruction for the entire community and the country. We are lack of knowledge choosingng a good leader. This leader is always becoming leader to fulfill his own need. May Allah protect from such evil people
ReplyDelete