நாங்கள் தொடர்ந்து படித்து வரும் அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வில் இருந்து,
தனது உடை விடயத்தில் அன்னையின் பேணுதல்
அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மகன்களில் ஒருவரான முன்திர் என்பவர் ஈராக்கில் வசித்து வந்தார்...
அவர் மக்காவில் இருக்கும் தன் தாயை பார்ப்பதற்காக அங்கிருந்து வரும் பொழுது அவர்களுக்காக ஒரு அழகான ஆடையை வாங்கி வந்தார்...
அந்த ஆடை ஈராக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற வேலைபாடுகளுடனும் அலங்காரங்களுடனும் கூடிய உயர் ரக ஆடை...
தன் மகன் தனக்காக வாங்கி வந்த அந்த பெறுமதியான ஆடையை கண் பார்வையை இழந்திருந்த அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா தன் கரங்களில் ஏந்தி,அதைத் தொட்டுத் தொட்டு பார்த்தார்கள்...
மெல்லிய ஆடைகளை உடுத்தாத அவர்கள், தொடுகை மூலம் அந்த ஆடை மெல்லியது என்பதை அறிந்து கொண்டதும் தன் மகனான முன்திரிடமே அதை கொண்டு சென்று கொடுக்குமாறு திருப்பி அனுப்பி விட்டார்கள்...
தன் அன்பு தாய்க்காக பார்த்து பார்த்து வாங்கிய ஆடையை அவர்கள் மறுத்து திருப்பி அனுப்பியதும்,மனம் வருந்திய அவர் அந்த ஆடையுடன் தன் தாயிடம் வந்தார்கள்...
அன்னை அஸ்மாவிடம்
"தாயே நீங்கள் நினைப்பது போன்று இந்த ஆடை உடலை வெளியே தெரியச் செய்யும் அளவு மெல்லியதல்ல.. எனவே நீங்கள் இதை தாரளமாக அணிந்து கொள்ளலாம் "
என்று எடுத்துக் கூற,
"மகனே! உடலை வெளியே தெரிய செய்யாவிடினும் உடலின் அமைப்பை இந்த ஆடை எடுத்துக்காட்டக் கூடியதாக உள்ளதே..
அதனால் எந்த உயர்ந்த ரக, நவீன ஆடையாயினும் அவ்வாறான ஆடை எனக்குத் தேவையில்லை" என்று மறுத்தார்கள்...
தாயின் பேச்சையும் அதில் உள்ள உண்மை தன்மையையும் உணர்ந்து கொண்ட அவர்களின் மகன்,அங்கே இருந்த கடை ஒன்றில் தன் தாயின் திருப்திக்கேற்ப கனமான, உடல் அமைப்பு வெளியே தெரியாதபடியான ஒரு ஆடையை வாங்கி வந்து அவர்களிடம் கொடுத்தார்கள்...
அதை வாங்கி தொட்டுப் பார்த்த அன்னை அஸ்மா,
"இது மாதிரியான ஆடைகளை எனக்கு வாங்கிக் கொடு! நான் அணிந்து கொள்கின்றேன்" என்று மகிழ்வுடன் தன் மகனிடம் கூறினார்கள்...
உடலமைப்பு வெளியே தெரியும் படியான ஆடையை அணிய மாட்டேன் என்று மறுத்து நின்றவர் இளம் வயது குமரிப் பெண்ணல்ல!!!
தள்ளாடும் வயதில் கண்பார்வையையும் இழந்திருந்த ஒரு மூதாட்டி...
வயதான பின்னரும் தன்னை பிற ஆண்களின் பார்வையில் இருந்து பாதுகாக்க நினைக்கும் இவர்கள், தன் இளம் வயதில் எத்தனை பேணுதலாக இருந்திருப்பார்கள் என்பதை,
அன்னியரின் முன்னிலையில் விதம் விதமான உடல் தெரிய நவீன ஆடைகளை அணிந்து செல்லும் நம் இன்றைய பெண்கள் சிந்திக்க வேண்டும்...
பெண்கள் தன் ஆடைகளில் பேணவேண்டிய ஒழுக்கத்தை இச்சம்பவம் மூலம் அறிந்து பயன் பெறுவோம்...
கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதின் விளைவாக ஏற்படும் ஒழுக்க சீர்கேடுகளை தவிர்க்க முயற்சிப்போம்...(தொடரும்)
0 Comments