Ticker

6/recent/ticker-posts

நரித்தனம் வென்றது -மகிந்தவின் பணப்பெட்டிகளில் சிக்கிய இலங்கை சாக்கடை அரசியல் -திவிரமடையப்போகும் போராட்டம்


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் இலங்கை பாராளுமன்ற சாக்கடைகளின் நரித்தனம் வெளிப்பட்டுள்ளது.ரணிலின் பாராளுமன்ற வருகையும் அதற்குப் பின் பிரதமராக ,பதில் ஜனாதிபதியாக  இன்று ஜனாதிபதியாக வந்துள்ளார்.

ரணிலுக்கு இன்று கிடைத்த வெற்றி ,அவருடைய திறமையாலோ அல்லது ஆதரவாலோ இல்லை .இந்த வெற்றி என்பது மகிந்தவின் பணத்தால்  கிடைத்த வெற்றியே தவிர வேறொன்றில்லை .

போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை சாக்கடைகளையும் தூக்கி எரிய வேண்டும்.பணத்திற்காக விலைபோகின்ற இந்த சாக்கடைகளை அடியோடு அளித்து நாடு சுபீட்சம் பெற தொடர்ந்தும் போராட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் இருக்கின்றார்கள் . 

ரணிலும் ,மகிந்தவும் போடுகின்ற நரித்தன விளையாட்டுக்களில் சிக்கியிருக்கும் அரசியல்வாதிகள் இனி மேல் தேர்தலில் வாக்குக்கேட்டு மக்கள் முன் செல்ல வேண்டாம் .ஏனென்றால் உங்களின் ஏமாற்று வேலைகள் அத்தனையையும் மக்கள் நன்றாகவே நினைவில் வைத்துக்கொள்வார்கள் .
 மாஸ்டர் 


Post a Comment

1 Comments