Ticker

6/recent/ticker-posts

கோவையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் கோவை பேரூர் கல்வி மாவட்ட கோவைப்புதூர் "வாசுகி மகளிரணி கிளை மன்றம்" தொடக்கவிழா.

17-07-2022 ஞாயிறன்று  மாலை 3-30 மணிக்கு
:கோவைப் புதூர், சாய்பாபா கோவில் மண்டப அரங்கத்தில் 



கோவை பேரூர் கல்வி மாவட்டத்தின் கோவைப் புதூர் வாசுகி மகளிரணி அறிமுக விழாவும்...மற்றும் கோவை மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டமும் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

திருமதி கீதா கென்னடி அவர்களுடன் அனைவரும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட,கடவுள் வாழ்த்துப் பாடலை இசைவேந்தர் கோவை அன்பு அவர்கள் பாடினார். 

குறள் யோகி, தமிழ்ச்செம்மல், முனைவர் மு.க.அன்வர் பாட்சா, உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் அவர்கள் தலைமை தாங்கி வாசுகி மகளிரணி கிளை மன்றம் தொடங்கி வைத்து பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

வரவேற்புரையை பேரூர் கல்வி மாவட்டச் செயலாளர் கவிச்சுடர் திருமதி மதிவதனி செல்வராஜ் அவர்கள் கூறினார்.

நிர்வாக அறங்காவலர் திரு. சீனிவாச வரதாச்சாரி கிரி அவர்கள் வாழ்த்துடன்,கோவை கல்வி மாவட்டத் தலைவர் கலைமாமணி மு.பெ. இராமலிங்கம் அவர்கள் அறிமுக, விளக்க உரையாற்றினார்.

காணொளி வழியாக வாழ்த்துரையை சென்னையிலிருந்து குறட்செல்வர் ஆதிலிங்கம் அவர்கள் வழங்கினார்.

பாராட்டுரை வாழ்த்துரை கலந்தாய்வு மற்றும் சாதனையாளர்களுக்குப் பரிசு வழங்கல் நிகழ்வுகளில் கோவை கல்வி மாவட்டச் செயலாளர் திரு.கோவை சேகர், துணைத் தலைவர்  கோவை அன்பு, மற்றும் லாலி ரோடு மகளிரணி பொறுப்பாளர்கள் திருமதி லலிதாம்பிகை, திருமதி கீதா, திருமதி ஜாக்குலின் மேரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர் 
வாசுகி மகளிரணித் பொறுப்பாளர்கள் : 
தலைவர் : திருமதி மதிவதனி செல்வராஜ்,
செயலாளர் : திருமதி மாலினி தேவி,
பொருளாளர் : திருமதி தனலட்சுமி,
துணைத் தலைவர்கள் :     
 1) திருமதி கீதா கென்னடி,
2) திருமதி செல்வி
துணைச் செயலாளர்கள்
1) திருமதி விஜய பூவழகி,
2) திருமதி மாலதி

திருமதி இராதாமணி, திருமதி மீனா, திருமதி சியாமளா,செல்வி ஜனனி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக  அறிமுகப்படுத்தப்பட்டனர்.
     
விழாவில் பங்கேற்ற அனைவரும் சிறப்பிக்கப்பட்டனர்.

நிறைவாக, நன்றியுரையைப்  பேரூர் கல்வி மாவட்ட துணைச் செயலாளர் கவிதாயினி, முனைவர்,திருமதி குணசுந்தரி அவர்கள் கூறினார்.
வேட்டை நிருபர்- தமிழ்நாடு 

Post a Comment

2 Comments

  1. மிகச் சிறப்பு,அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ங்க உறவுகளே 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 Thank you so much for your kind perusal...

    ReplyDelete