
உலக மக்களையே
திரும்பிப் பார்த்திட வைத்த
நெடுங்காலப் போர்க்களம்
நடந்த நாடும் நம் நாடே.
நாட்டு வளர்த்தையெல்லாம்
பங்கிட்டு மீண்டும் அகில
நாட்டையே திரும்பிப் பார்த்திட
வைத்ததும் நாடும் நம் நாடே.
உயிர்க்கொல்லி
துப்பாக்கியிடம் பயந்து
அகதிகளாக
அழைந்தது அக்காலம்.
உணவுகள் இன்றி
அகதியாய்ப் போவது இக்காலம்.
உரிமையைக் கேட்டு
போர்க்கொடி தூக்கியது
அப்போது ஓர் இனம்.
அதனை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
இதயம் இல்லாமல்
சில மனிதயினம்.
முன்னுக்குப் பின் முரண்பாடு
மொத்தமாகப் போடுது
இப்போது கூப்பாடு .
வேற்றுமையை ஒளித்து
ஒற்றுமையை வளர்த்து
தேடுகின்றனர் சாப்பாடு.


0 Comments