Ticker

6/recent/ticker-posts

அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது ராஜபக்சாக்களை காப்பாற்றவே

ராஜபக்சாக்களின் நிழல்  ஆட்சிதான் இலங்கையில் நடக்கின்றது என உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;
ரணில் விக்ரமசிங்க ஊழல்கள் நிறைந்த ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்காகவே ,ராஜபக்சாக்களின் ஆசியுடன் பதவியை பெற்றுக்கொண்டார்.என்றும் தெரிவித்துள்ளார்.

ரணிளுக்கு கிடைத்த பதவிகள் எதுவுமே நேர்மையாக கிடைத்ததல்ல.

தேர்தலில் இலங்கை மக்கள் கொடுத்த அடியில் நொருங்கிப்போயிருந்த ரணிலுக்கு ஆறுதலாயிருந்தது ராஜபக்சாக்கள் மட்டும்தான்.

நாடு திவாலாகப் போகின்றதை முன்கூட்டியே அறிந்துகொண்ட ராஜபக்சாக்கள் ,முற்றும் துறந்து முடங்கியிருந்த ரணிலை நாடினார்கள்.ரணிலை முன்னிறுத்தி தப்பிவிடலாம் என்ற நோக்கத்தில் கோடிகளை கொட்டியிருக்கின்றார்கள்.

ரணிலின் நரித் தந்திரதின் மீது மிகப்பெரும் நம்பிக்கையிலிருந்த ராஜபக்சாக்கள் நினைத்தது நடந்தது,

எப்படியோ மக்களை ஏமாற்றி ராஜபக்சாக்கள் தப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் உலக நாடுகள் ராஜபக்சாக்களை ஏற்றுக்கொள்ள தயாரில்லை.

சர்வதேசம் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றன,

இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்வில் கோடிகோடியாக கொட்டப்பட்ட பணத்தில் ராஜபக்சாக்களின் ,வாரிசுகள் மீண்டும் நாடாளுமன்றதில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள்.

நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசியல்வாதிகள் பெரும்பான்மையான வாக்குளைபெற்று ஆட்சியை பிடித்துள்ளார்கள் .

உலகில் எங்குமே நடக்காத ஒரு நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்,

நூற்றுக்கு 99%வீதமான இலங்கை மக்கள் வெறுக்கின்ற அரசியல்வாதிகள் பணபலத்தாலும் ,ரவுடித்தனத்தாலும் இன்று இலங்கையில் ஆட்சி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமராகவும் ராஜபக்சாக்களின் மிகப்பெரிய பக்தனுக்கே வழங்கப்பட்டுள்ளது.ரணிலின் நரித்தனத்தை கண்டும் காணாமலும் கடந்து போகின்ற ஒரு ஜடத்திற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக அலி சப்ரி என்ற பொம்மை      
முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வெளிநாடுகளில் புகலிடத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே, அவரது நெருங்கிய நண்பரான அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் ராஜபக்சக்களின் மறைமுக ஆட்சியே ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த தேர்தலில் ராஜபக்சாக்கள் வெற்றி பெருவதற்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்டவர் அலி சப்ரி.ரணிலுடைய நோக்கமும் அலி சப்ரியின் நோக்கமும் ஒன்றுதான் .

உயிரைக் கொடுத்தேனும் ராஜபக்சாக்களை காப்பாற்ற வேண்டும்.அவர்களுடைய ஊழல்களை எப்படியேனும் அழித்துவிடவேண்டும் எண்ற மிகப் பெரும் பொறுப்புக்களோடு பதவியில் இருப்பவர்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் அலி சப்ரியின் பேச்சை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு வருகின்றது.

'இலங்கை மக்களுக்கு கோட்டபயாதான் உண்மையான தலைவர் .முக்கியமாக சிறுபான்மை இனத்தின் தோழனாக இருப்பார்.அது மட்டுமின்றி இலங்கை ஆசியாவிலேயே மிகவும் முன்னேறிய நாடாக விளங்கும் .சிங்கப்பூர் லீ குஆங் மலேசியா மகாதிர் போன்ற சிறப்பான ஆட்சியை கோட்டபயாவால் மட்டுமே தரமுடியும்.குறைந்தது 20 வருடங்களாவது பெரமுனதான் ஆட்சி செய்யும் "என்று ஆவேசமாக சொன்னதை இலங்கை மக்கள் இன்றும் மறக்காமல் வலைதளங்களில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள் .

அலி சப்ரியின் இந்த ஜோக் இந்த நூற்றாண்டில் மிகவும் போற்றத்தக்கதாய் கருதப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன் அலி சப்ரிக்கு எத்தனையோ பதவிகள் கொடுக்கப்பட்டும் ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் மீண்டும் மீண்டும் வெட்கமில்லாமல் ராஜபக்சாக்களின் அடிமையாகத்தான் இருக்கின்றார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குரிப்பிட்டதைப்போன்று ராஜபக்சாக்களுக்கு வெளி நாடுகளில்  புகலிடத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அலி சப்ரிக்கு இந்த அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.   

இப்படியாக பலகோணங்களிலும் இலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களின் போராட்டத்தை நிறுத்த காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவவத்தை மேற்கொண்ட ரணிலின் காட்டுமிராண்டி செயலால் இன்று உலகெங்கும் மிகவும் மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன, 

மே 9 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலை கண்டித்த ரணில் விக்கரமசிங்க, தற்போது காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவவத்தை மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்று ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது எனவும் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சொந்த நாட்டு மக்களின் ஆதரவும் இல்லை .சர்வதேச ஆதரவும் இல்லை இப்படி ஒரு அரசாங்கம் உலகில் எங்காவது உண்டா?
 மாஸ்டர்  
 

Post a Comment

0 Comments