
கோயம்புத்தூரில் செயல்பட்டுவரும் -எய்ம் தன்னார்வத்தொண்டு நிறுவனம் கோவை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி திடக்கழிவு மேலாண்மை குறித்து ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி என் எஸ் எஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் திருமதி ஜெஜெனட் தலைமையில் முனைவர் எஸ். சோபியா, இ.சி.இ துறைத் தலைவர். முனைவர் கே சி ரம்யா, 8 இ துறைத் தலைவர் திருமதி ஆர் கீதாமணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 120 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.கோவை மாவட்ட தூய்மை இந்தியா திட்ட நோடல் அதிகாரி திரு எஸ். ஆர் ஜெரால்டு சத்தியபுனிதன், தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர்கள் திரு முருகன், திரு சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சியளித்தனர்.

பயிற்சியின்போது திடக்கழிவுகளின் மூலகங்கள், கழிவுகளின் வகைப்பாடு. அதன் விளைவுகள், மறு சுழற்சியின் முக்கியத்துவம், திடக்கழிவு மேலாண்மை குறித்தும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து மக்கும் தன்மையுடைய துணிப்பை போன்றவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் தெளிவாக விளக்கப்பட்டது.
பூமியை துஷ்பிரயோகம் செய்யாமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால் நமது நாடும் தூய்மையாக மாறும் எனவும் இந்தத் தேசத்தைச் சுத்தமாகவும் சுத்தமாக மாற்றுவதும் நம் ஒவ்வொருவரின் கடமையெனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அனைவரும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் தூதர் முனைவர் மு க அன்வர் பாட்சா பேசுகையில், நமது குப்பை நமது பொருப்பு என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் எனவும் இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டியதில் மாணவர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது எனவும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இறுதியில் என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது என் கடமையென தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு பி ஏ. திருநாவுக்கரசு, மற்றும் திரு எம். தேவராஜ் ஆகியோர் இந்தப் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
தகவல்
பி ஏ திருநாவுக்கரசு
நிர்வாக அறங்காவலர்,
எய்ம் தன்னார்வத் தொண்டு நிருவனம்,
கோயம்புத்தூர்.
அலைபேசி :
9443038339,
9840539839


0 Comments