
1.உறிஞ்சிய நீரை
மேகங்களாக்கி மேகங்களை
நீர்கம்பியாக்கி பூமிக்கு
மழையாகத் தருகிறது
ஆகாயம்.
2.குரைத்து ஓய்ந்த
தெருநாய்களை நள்ளிரவில்
எழுப்பி விட்டுப் போகிறது.
காவலர் ரோந்து வாகனம்.
3.வீட்டுக்கு எதிரில்
புதிதாய் தெருவிளக்கு
இனி மாதம் முழுவதும் பௌர்ணமி.
4.நீ என்னை
நெருங்கி வருகிறாய்.
அதுவரையில்...
என் தனிமைக்குத்
துணை இருந்த நிலவு
மெல்ல மெல்ல
விட்டு விலகுகிறது
என்னை...!


0 Comments