Ticker

6/recent/ticker-posts

"அல்லாஹ் நினைத்தானென்றால் அந்த ஷைத்தானும் கட்டுப்படுவான்"

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஓர் ஏழை சோமாலிய முஸ்லிம் பெண் ஒரு நாள் ரேடியோவில் உதவி வேண்டி கேட்கிறார், அப்போது திடீரென்று ஒரு நாத்திகர் அந்தப் பெண்மணியின் அறிவிப்பைக் கேட்கிறார்.

அந்தப் பெண்ணைக் கேலி செய்வதற்காக அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணையும், முகவரியையும் கேட்டு, எடுத்துக் கொண்டு தன் செக்யூரிட்டியிடம் உணவு பொருட்களும் மற்றும் தேவையான பிற பொருட்களையும் தயார் செய்து அந்தப் பெண்ணின் வீட்டின் முகவரிக்கு எடுத்துச் செல்லும் படி அறிவுறுத்தினார்,  மேலும் அந்த செக்யூரிடியிடம் : அந்தப் பெண் இந்த உதவிப் பொருட்கள் எங்கிருந்து வந்தது,  யார் அனுப்பினார் என்று கேட்டால், அந்தப் பெண்ணிடம் இவை அனைத்தும் ஷைத்தானிடமிருந்து வந்தது என்று அவளிடம் சொல்லுங்கள் என்று சொல்லியனுப்பினார்..

அந்த செக்யூரிட்டி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்தார், அவரைக் கண்டு அந்தப் பெண் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்...

அந்தப் பெண்ணிடம் செக்யூரிட்டி கேட்டார்..! இந்த உதவிப் பொருட்களெல்லாம் எங்கிருந்து வந்தது என்று கேட்க மாட்டீர்களா?..

அதற்கு (ஃபாத்திமா) என்கிற அந்தப் பெண்மணி அளித்த பதிலைக் கண்டு அந்த ஆங்கிலேயரே (டாக்டர் டிமோசி வென்டர் நாத்திகர்) சிந்தித்து, தன் சிற்றறிவுக்கு விளங்கி  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தன் பெயரை அப்துல் ஹக்கீம் முராத் என்று மாற்றுமளவிற்கு அந்தப் பெண்ணின் பதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது..

அந்த சிந்தனையை தூண்டும் அருமையான பதில் என்னவெனில்...

அந்தப் பெண்மணி சொன்னாள்: இந்த உதவிப் பொருட்களை யார் அனுப்பினார் என்று அறிந்து கொள்ள எனக்கு  அவசியமில்லை, அதை அறிய நான் முக்கியத்துவமும் கொடுக்க மாட்டேன், ஏனென்றால் அல்லாஹ் நினைத்தானென்றால் அந்த ஷைத்தானும் கட்டுப்படுவான் என்று காரசாரமாக பதிலளித்தார்கள்....

(அரபு நூலில் இருந்து
 படித்ததில் பிடித்தது )
தொகுப்பு; சுபைதா 



 



Post a Comment

0 Comments