Ticker

6/recent/ticker-posts

இனிதான் தொடக்கம்.. AI ஆடப்போகும் அபாய ஆட்டம்.. எச்சரிக்கை மணி அடித்த நபர்!


இன்றையக் கால கட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இந்த சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

 
சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபத்து குறித்து ட்விட்டர் தளத்தை முதலில் உருவாக்கிய அதன் நிறுவனரான ஜாக் டார்சி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இவரின் இந்த உரை தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து ஜாக் கூறுகையில் "ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்கங்கள் இந்த சமூகத்திற்கு நல்லதை செய்வதை விடவும் அதிக அளவு கெடுதலையே செய்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

போலி செய்திகள், புரளி செய்திகள், தவறான நடத்தைகள், மோசமான வெறுப்பு பேச்சுக்கள் போன்றவைகள் சமூக ஊடகங்கள் சமீபக்காலமாக அதிகரித்துவருகிறது. பொதுவாக சமூக வலைத்தளங்கள் மக்களை சுதந்திரமாக செயல்பட கூடிய போக்கை தவறான வழியில் மாற்றி உள்ளது. எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு இதன் போக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என்றும் ஜாக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசியல், மதம் ஆகியவற்றை சார்ந்த வெறுப்பு பிரச்சாரங்களும் அதிக அளவில் சமூக ஊடகங்களில் உருவாகி வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்க, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவது என்பது சரியான தீர்வாக இருக்காது. எனவே, இதற்கு பதில் சீரான செயல்பாடுகளை கொண்ட சமூக வலைதளங்கள் உருவாக வேண்டும் என்று ஜாக் தெரிவித்தார். அந்த வகையில், ட்விட்டர் தளத்தை கூ (koo) என்கிற தளம் முந்துவதற்கு முயற்சி செய்து வருகிறது. அதே போல ட்ரூத்சோஷியல் (TruthSocial) என்கிற தளமானது ட்விட்டரை முந்துவதற்கு அமெரிக்காவில் முயற்சி செய்து வருகிறது.

சமூக வலைத்தளங்களே இவ்வளவு மோசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நேரத்தில், தற்போது செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் அளவு தொழில்நுட்ப சூழல் மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு சரியான சட்டம், விதிமுறைகள், அணுகுமுறை போன்றவற்றை உருவாக்காவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி விடும் என ஜாக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று, போலி செய்திகளை கண்டறியும் ஏஐ டூல்களை உருவாக்க வேண்டியது என்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதைக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி செய்திகளை நீக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

news18


 



Post a Comment

0 Comments