Ticker

6/recent/ticker-posts

பெண்களை கர்ப்பமாக்கினால் லட்சங்களில் பணம்.. விளம்பரத்தை பார்த்து படையெடுத்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம்


பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு 13 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. 

“pregnant job agency” என்ற போர்டை பார்த்ததும் இளைஞர்கள் பட்டாளம் அங்கு குவிந்தது தான் இந்த மோசடி கும்பலுக்கு வசதியாக போய் விட்டது. கர்ப்பமாக்கினால் காசு என்று விளம்பரம் செய்து கஷ்டப்படாமல் பணத்தை கறந்த கும்பலின் நூதன மோசடி பின்னணி என்ன? உலகில் வேறு எங்குமே யோசித்து பார்க்க முடியாத நூதன மோசடியைத்தான் இந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது.

நிறுவனத்தின் பெயரிலேயே இளைஞர்களை வலை வீசி பிடித்துள்ளது இந்த கும்பல்.. அப்படி என்ன நூதன வேலை என்று பார்த்தவர்கள் சற்று வியந்துதான் போயினர். “pregnant job AGENCY” இதுதான் அந்த நிறுவனத்தின் நூதன பெயர். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை கர்ப்பமாக்கினால் லட்சத்தில் பணம் கிடைக்கும் என்பது தான் இந்த நிறுவனத்தின் நூதன விளம்பரம்.

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம். இதற்காக முதலில் 799 ரூபாய் செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்களை நிறுவனத்தினர் அவர்களுக்கு வழங்குவார்கள் பெண்களின் அழகை பொறுத்து 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வைப்புத்தொகையை இளைஞர்களிடம் வசூல் செய்வார்கள்.

பணம் செலத்தும் இளைஞர்கள் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு 13 லட்சம் வரை தொகை வழங்கப்படும். அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த படையெடுத்துள்ளனர். பணத்தை கட்டி விட்டு காத்திருந்தவர்களுக்கு வெகுநாட்கள் ஆன பிறகும் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்படவில்லை. காத்திருந்து கடுப்பானவர்கள் நேரடியாக சென்று பார்த்த போதுதான் அது கப்சா கும்பல் என்பது தெரியவந்துள்ளது.

சில்லறைத்தனமான ஆசையில் சிக்கி பணத்தை இழந்திருந்தாலும், அவர்கள் போலீசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளனர். இப்படி ஒரு நூதன மோசடியை இதுவரை கேள்விப்பட்டிராத பீகார் போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரிடம் விசாரணைக்கு விட்டு விட்டனர். எஸ்ஐடி போலீசார் விசாணையில் இந்தமோசடிக்கு மூளையாக செயல்பட்ட முன்னா என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்தனர். விவரமாக யோசித்து விவகாரமான பிசினஸ் தொடங்கிய கும்பலின் நூதன மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

news18
 


 



Post a Comment

0 Comments