Ticker

6/recent/ticker-posts

10 ஆண்டாகப் பார்த்துக்கொண்டவரைக் கொன்ற சிங்கம்


நைஜீரியப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிங்கம் அதனைப் 10 ஆண்டாகப் பார்த்துக்கொண்ட பராமரிப்பாளரைக் கொன்றது.

Obafemi Awolowo பல்கலைக்கழக விலங்குத் தோட்டத்திற்கு ஓலபோட் ஓலவுயி (Olabode Olawuyi) பொறுப்புவகித்தார்.

அவர் சிங்கங்களுக்கு உணவு அளித்துக்கொண்டிருந்தபோது ஓர் ஆண் சிங்கத்தால் தாக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சக ஊழியர்களாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அந்தச் சிங்கம் கொல்லப்பட்டுவிட்டதாக BBC சொன்னது.

எதனால் சிங்கம் அவ்வாறு நடந்துகொண்டது என்பது தெரியவில்லை என்று அந்தப் பல்கலை கூறியது.

சம்பவத்தின் படங்கள் நைஜீரியாவில் பலராலும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பல்கலையின் துணைத்தலைவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

seithi


 



Post a Comment

0 Comments