அதேபோல், அங்கு வெவ்வேறு பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடியும். பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து கலானிய ஆதிக்கம், மேற்கத்திய தாக்கம், அரசியல் கருத்துருவாக்கம் ஆகியவை சார்ந்தும் பண்பாடு, கலாச்சார நிகழ்வுகள் மாறுபடும் எனலாம்.
சில கலாச்சாரங்கள் சிலருக்கு வினோதமாக தெரியலாம், ஆனால் அதை பின்பற்றுபவர்களுக்கு அடிப்படையில் ஏதேனும் ஆழ்ந்த நம்பிக்கையும், பிடிப்பும் நிச்சயம் இருக்கும். எனவே, ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்து மற்ற கலாச்சாரங்களை அளவிட கூடாது என கூறப்படுவதுண்டு. மேலும், கால மாற்றத்திற்கு ஏற்ப பண்பாடும், கலாச்சாரமும் மாறுப்படும். இதற்கு தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாச்சாரங்களை ஆழமாக ஆய்வு செய்த தொ.பரமசிவனின் கூற்றை உதாரணமாக சொல்லலாம். "மரபு என்பதே மாற்றத்திற்கு உட்பட்டு என்பதுதான்".
அந்த வகையில், ஆசிய நாடுகளில் மிகுந்த செல்வச் சழிப்பான நாடான ஜப்பானில் 1,250 ஆண்டுகள் பாரம்பரிய நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. அதில் தற்போது அதாவது 1,250 ஆண்டுகளுக்கு பின் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்திருந்திருக்கிறது. தொ.பரமசிவனின் அந்த கூற்று மெய்யாகியிருக்கிறது. ஆம், மத்திய ஜப்பானில் வருடாவருடம் நடைபெறும் ஆண்களின் 'நிர்வாண திருவிழா' குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதில் தற்போது முதன்முதலாக பெண்களும் பங்கேற்றிருப்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சடங்கில் பெண்களின் 7 குழுக்கள் பங்கேற்றிருக்கின்றன. அதாவது, இந்த திருவிழாவே தீய சக்திகலை ஒழித்து, வாழ்வில் மகிழ்ச்சியை பெறவே இந்த சடங்கு நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விஷயம் என்னவென்றால், பெயரில் இருப்பது போல், இந்நிகழ்வில் யாரும் நிர்வாணமாக பங்கேற்க மாட்டார்கள்.
கடந்த வியாழக்கிழமை (பிப். 22) நடைபெற்ற இந்த திருவிழாவில் பெண்கள் இடுப்பளவிற்கு வரும் பர்பிள் நிறத்திலான Happi Coats மற்றும் வெள்ளை ஷார்ட்ஸையும் அணிந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர். சுமோ வீரர்கள் அணியும் ஆடையுடன்தான் எப்போதும் ஆண்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள்.
திருவிழா நடைபெறும் அந்த கடவுளின் சன்னதியில் மத போதகர் ஒருவர் கூறுகையில், இந்த திருவிழாவில் பெண்களுக்கு தடை என எப்போதுமே கூறியதில்லை. முன்னர், சில பெண்கள் தனித்தனியாக இங்கு வந்திருக்கின்றனர். இருப்பினும், கடந்தாண்டு பெண்கள் அமைப்பினர் சில இதுகுறித்து விசாரிக்கையில், தாராளமாக வரலாம் என்று கூறியிருந்தேன். முக்கியமாக இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் கொண்டாட்ட திருவிழா. மகளிரின் வருகையால் நிச்சயம் கடவுளும் மகிழ்ச்சியடைந்திருப்பார்" என தெரிவித்தார்.
இருப்பினும், இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கூறப்படும், ஆண்கள் கும்பலாக ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு தீய சக்தியை விரட்டும் அந்த நிகழ்வில் மகளிர் பங்கேற்கவில்லை. பெண்களின் உடலை கவனத்தில் கொண்டு அவர்களை அந்த நிகழ்வுக்கு மட்டும் அனுமதிப்பது கடினமான ஒன்றாகும் என்றார்.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments