Ticker

6/recent/ticker-posts

வேலைக்காக செல்லும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள்


இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது திறமையானவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் மாதாந்தம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும்,நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

எதிவரும் நாட்களில் வெளிநாடு செல்வோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன 


 



Post a Comment

0 Comments