Ticker

6/recent/ticker-posts

$500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?

டிரம்ப் தனது சட்டப்பூர்வ கடன் $500 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் திவால் நிலையை அறிவிப்பாரா? என்ற கேள்வி சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இரண்டு நாட்கலுக்கு முன்னதாக (வெள்ளிக்கிழமை) அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான வழக்கு ஒன்றில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை தான் என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.  

தீர்ப்பின்படி, டிரம்ப் தனது நிறுவனத்தை திவால் என்று அறிவித்தாலும், அபராதத் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் டிரம்ப் அவ்வாறு செய்தால் சமன்பாடுகள் மாறும்.  

நீதிமன்ற அபராதம் அறிவிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சட்டப்பூர்வ கடன் பொறுப்புகள் அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. 

டிரம்ப் மொத்தமாக $463.9 மில்லியன் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். அபராதம் மற்றும் வட்டியும் சேர்ந்து தொகை அதிகரிக்கும் என்பதுடன், அது செலுத்தப்படும் வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ட்ரம்பிற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்த நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் கருதுகிறார்.

எழுத்தாளர் ஈ. ஜீன் கரோல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குற்றச்சாட்டில், அவருக்கு $83.3 மில்லியன் தொகையை டிரம்ப் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அண்மையில்  டிரம்புக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறுக்காக டிரம்ப்பிடம் இருந்து கரோலுக்கு தனி நடுவர் மன்றம் $5 மில்லியன் வழங்கியது.

டிரம்பின் தரப்பு என்ன சொல்கிறது?

தான் நிரபராதி என்றும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் டிரம்ப் கூறுகிறார். எனவே, அடுத்தது என்ன நடக்கும்? அவர் அபராதத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

மொத்த அபராதத் தொகை

மேற்கூறிய இரண்டு வழக்குகளிலும், வட்டி உட்பட மொத்தம் 540 மில்லியன் டாலர்களுக்கு மேல் டிரம்ப் கடன்பட்டிருக்கிறார். சிவில் மோசடி வழக்கில் சப்போனாவுக்கு இணங்க மறுத்ததற்காக அவர் மேலும் $110,000 கடன்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, அவரது வழக்கு தோல்வியுற்றதால், நியூயார்க் டைம்ஸுக்கு $400,000 சட்டக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பதால் அபராதம் மீட்டர் வட்டியாய் எகிறுகிறது.

மேல்முறையீடு செய்ய முடியுமா?

டிரம்ப் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. மேல் முறையீட்டில், அபராதம் குறைய வாய்ப்பும் இருக்கிறது.  

$350 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்ட சிவில் மோசடி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக டிரம்பு முதலில் இடைநிலை-நிலை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கும் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், நியூயார்க்கின் உயர்மட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். இருப்பினும் அது சாத்தியமில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் சொத்துக்களின் நிகர மதிப்பு

டிரம்ப்பின் சொத்து மதிப்பு $10 பில்லியன் எனக் கூறினாலும், நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் சுயாதீன மதிப்பீடுகளின்படி, $2 பில்லியனுக்கு அருகில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு இருக்கலாம்.

எனவே, சட்டப்பூர்வமான தொகைகளை (அபராதம், கடமை) செலுத்துவதற்கு டிரம்ப் கையில் போதுமான பணம் இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை.  

டிரம்ப் திவால் அறிவிப்பாரா?

பணப் பிரச்சனை ஏற்பட்டு, டிரம்பின் நிறுவனம் திவால் என்று அறிவித்தாலும், டிரம்ப் தொகையை செலுத்த வேண்டும். டிரம்புக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம், மிகவும் கடுமையானது என்றோ, தொகையை செலுத்த சாத்தியமில்லை என்று கருதும் சூழ்நிலையில், அவருக்கு எதிரான தீர்ப்புகளை அமல்படுத்துவது நிறுத்தப்படும்.

 பண விஷயத்தில், தொழிலதிபர் டிரம்புக்கு எப்போதும் பிரச்சனைகள் தொடர்கின்றன. குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிலிருந்து (RNC) பிரச்சாரப் பணத்தைப் பெறுவது தொடர்பாக, டிரம்ப் ஏற்கனவே விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான ட்ரம்பின் எஞ்சியிருக்கும் ஒரே போட்டியாளரான நிக்கி ஹேலி, RNC டிரம்பின் தனிப்பட்ட உண்டியலாக இருக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

zeenews


 



Post a Comment

0 Comments