முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டனவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, டிக்டொக், எக்ஸ், ஸ்னெப் மற்றும் டிஸ்கோர்ட் போன்ற முன்னணி சமூக ஊடகநிறுவனங்களன் பிரதானிகள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் முன்னிலையாகியிருந்தனர்.
சமூக ஊடக பயன்பாட்டினால் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை, உயிரை மாய்த்துக் கொண்டமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணகைளில் முகநூலின் பிரதானி ஸக்கர்பேர்க், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இணையத்தை பயன்படுத்தும் சிறுவர்களை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது சமூக ஊடகத்தை பயன்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் புகைப்படத்தை ஏந்தி அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் ஸக்கர்பேர்க் மன்னிப்பு கோரியிருந்தார். சமூக ஊடக நிறுவனப் பிரதானிகளிடம் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெறக்கூடிய சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமெரிக்க செனட்டர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments