அமலாக்கத்துறை பெயரை சொல்லி ரூ.164 கோடி கேட்டு மிரட்டுவதாக மும்பையைச் சேர்ந்த ஓம்கார் டெவலப்பர்ஸ் (Omkar Developers) நிறுவனம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை விசாரித்தபோதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஓம்கார் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கும் தனுகா டெவலப்பர்ஸ் (Dhanuka Developers) நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து ஓம்கார் நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் தனுகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் 2009ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்துதான் தனுகா நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ் தனுகா மற்றும் அவரது மருமகன் ராகேஷ் கெடியா ஆகியோர் அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி ஓம்கார் டெவலப்பர்ஸிடம் இருந்து மிரட்டி ரூ.164 கோடி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
இந்த திட்டத்தின்படி ஓம்கார் நிறுவனத்தை மிரட்டி வந்துள்ளது. இந்நிலையில்தான் அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ஹிரேன் ரமேஷ் பகத், அமே சாவேகர், ராஜேந்திர ஷிர்சத், ராகேஷ் கேடியா, கல்பேஷ் போஸ்லே, அவ்னிஷ் துபே ஆகிய 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு பின்னால், தனுகா நிறுவனம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வுக்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலேவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "பா.ஜ.கவுக்காக அமலாக்கத்துறை பெயரில் பணம் பறிக்கப்படுகிறதா?" என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments