Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-129


குறள் 150.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

அறம் சொல்ற நல்ல வழியில்  நடக்காட்டக் கூடா பரவால்லை. ஆனா ஒரு நாளும், அடுத்தவன் பெஞ்சாதி மேல ஆசைப் படாம இருக்கணும்.

குறள் 152.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

ஒருத்தன் நமக்கு ஒரு கெடுதல் செஞ்சுட்டாமுன்னா அதை பொறுத்துக்ணும். சாகுற வரைக்கும் நெனச்சுகிட்டே இருக்கக்காம அதை அப்பப்ப மறந்துறணும்.  அது தான் சிறந்தது. 

குறள் 154. 
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.

எல்லா நல்ல குணங்களும் இருக்கக் கூடிய  ஒருத்தங்கிட்ட இருக்கது எல்லாம் அவனை விட்டுட்டு போகாம இருக்கணும்னா, மொதல்ல அவனோட பொறுமை அவனை விட்டு போகாம பாத்துக்கிடணும். 

குறள் 156. 
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

நமக்கு கெடுதல் செஞ்ச பயலுவளை, மன்னிச்சு விடாம, தண்டிச்சா, அன்னைக்கு மட்டுந்தான் நமக்கு மகிழ்ச்சி கெடைக்கும். ஆனா அதைப் பொறுத்துக் கொண்டோம்னு வச்சுக்கிடுங்க, ஆயுசு முழுக்க நமக்கு புகழ் இருக்கும். 

குறள் 157.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

ஒருத்தன் நமக்கு கெடுதல் செஞ்சுட்டாமுன்னா, அதுக்குப்போயி மனசு நொந்து போய், அவனுக்கு அதே கெடுதலை திருப்பி செஞ்சிறக் கூடாது. 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments