Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-130


குறள் 158.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

நல்ல திமிர் எடுத்துப்போய் நமக்கு ஒட்டிக்கி ரெட்டி கெடுதல் செஞ்சானுவொன்னா, அவனுவொளை எல்லாம் நம்ம பொறுமையால வென்று காட்டணும்.

குறள் 159.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

கண்டமானிக்கு ஒருத்தன் அசிங்க அசிங்கமா ஏசுதததை  எல்லாம் பொறுத்துக்கிடுதவங்க முற்றும் துறந்த துறவிகள் மாதிரி. 

குறள் 160.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

சாப்பிடாம நோன்பு இருக்கவொ என்னவோ பெரியவொ தான். ஆனாலும் அவொ அடுத்தவன் அசிங்கமா ஏசுததை பொறுத்துக்கிடுதவொளுக்கு அடுத்தாப்ல தான்.

குறள் 161.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

எப்பமுமே ஒருத்தனோட மனசுல பொறாமைக் கொணம் இருக்கவே கூடாது. அந்த கொணத்தை ஒழுக்கத்தோட நெறியாக வச்சுக்கிடணும். 

குறள் 162.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

ஒருத்தங்கிட்ட பொறாமைக் கொணம் மட்டும் இல்லாம இருந்திட்டா போதும். அந்த பண்பு தான் இருக்கதுலேயே ஒசத்தி. 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments