அமெரிக்காவின் முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மிச்சிகன் (Michigan), மிஸோரி (Missouri), ஐடாஹோ (Idaho) ஆகிய மாநிலங்களில் இடம்பெற்ற குடியரசுக் கட்சித் தேர்தல்களில் அமோக வெற்றிபெற்றிருக்கிறார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர்த் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.
வரும் செவ்வாய்க்கிழமை Super Tuesday வருகிறது. 15 மாநிலங்களிலும் ஒரு வட்டாரத்திலும் தேர்தல் நடைபெறும். அவற்றில் வெற்றிபெற்றுத் திரு. டிரம்ப் அதிபர் வேட்பாளர் நியமனத்தை உறுதிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுக் கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து நிற்கும் திருமதி நிக்கி ஹேலி (Nikki Haley) இதுவரை ஒரு மாநிலத்தில்கூட வெற்றி பெறவில்லை.
எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும் தொடர்ந்து போட்டியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நன்கொடையாளர்களுக்கு நன்றி சொன்னார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments