Ticker

6/recent/ticker-posts

படத்தில் உள்ள வித்தியாசமான ஆப்பிள் பழத்தை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?


ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. மனித மனங்களை குழப்புவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம்.

அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பழ வகைகளில் அனைவரும் ஆசையோடு விரும்பி சாப்பிடக் கூடிய ஆப்பிள் பழங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் கிட்டதட்ட 40-க்கும் மேற்பட்ட ஆப்பிள் பழங்கள் உள்ளது. ஆனால் இதில் ஒரேவொரு வித்தியாசமான ஆப்பிள் பழம் மட்டும் உங்கள் பார்வைக்கு எளிதில் தெரியாமல் ஒளிந்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.

இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்கள் நேரம் சென்று கொண்டேயிருக்கிறது. கூர்ந்த அவதானிப்பு திறன் உள்ளவர்களால் மட்டுமே இதற்கான விடையை உடனே கண்டுபிடிக்க முடியுமாம்.

4 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
உங்கள் கண் பார்வையும் அறிவுத்திறனும் கூர்மையாக இருந்தால் சொல்லப்பட்ட நேரத்தை விட சீக்கிரமாகவே இதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இன்னும் தெரியவில்லையா? சொன்ன நேரத்திற்குள் சரியான விடையை கண்டுபிடித்த நபர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களின் கண் பார்வை மிகவும் அற்புதமாக உள்ளது. பதில் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடிக்கலாம்.

முதலில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எல்லா ஆப்பிள் பழங்களும் அச்சு அசல் ஒன்றுபோல் இருப்பதாகவே தோன்றும். இதனால் குழப்பம் அதிகரிக்கும். ஆனால் சிறிய வேறுபாடு உள்ளது. கூர்ந்து கவனித்தால் உங்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். படத்தின் கீழிருந்து இரண்டாவது வரிசையை சற்று உன்னிப்பாக பார்த்தால் சரியான விடை கிடைக்கும். அதில் இடது ஓரத்திலிருந்து மூன்றாவது பழத்தைப் பாருங்கள். மற்ற பழங்களின் இலை வலது பக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்தப் பழத்தில் உள்ள இலை மட்டும் இடதுபுறமாக உள்ளது. இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை.

பதில் தெரியாதவர்களுக்காக இந்தப் படத்தில் உள்ள வித்தியாசமான ஆப்பிள் பழத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 4 நொடியில் கண்டுபிடித்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர் எனக் கூறப்படுகிறது. பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் பார்வைத்திறனும், அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

இன்றைய நவீன உலகில் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் எப்போதையும் விட மிகவும் அவசியமாகும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்களின் அவதானிப்பு திறனை கூர்மைப்படுத்துவதோடு அறிவுத்திறனையும் அதிகப்படுத்துகிறது.

news18


 



Post a Comment

0 Comments