Ticker

6/recent/ticker-posts

5 நொடிகள் தான் டைம்.. வித்தியாசமான எலியை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்


ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. உங்களைப்பற்றி நன்றாக புரிந்துகொள்ள இது உதவுகிறது. பாரம்பரியமான ஆளுமைத்திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்லது இது. கேள்வி, பதிலுக்கு இல்லாமல் வெறும் படம் மட்டுமே இதிலிருக்கும். ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும்போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும்போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.

இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நம் கண்களுக்கு ஒரேப்போன்று காட்சி தரும் பல எலிகள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு எலி மட்டும் மற்ற எலிகளை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள்.

5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

பெரியவர்களும் சிறியவர்களும் விளையாடும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் அந்த வித்தியாசமான எலி எங்கிருக்கிறது என கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு எலியையையும் கவனமாக பாருங்கள். இன்னும் தெரியவில்லையா? சரி, வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். மேலிருந்து இரண்டாவது வரிசையில் உள்ள எலிகளை பார்த்தால் உங்களால் ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும். அதில் ஒரு எலி மட்டும் மீசையுடன் கண்ணை உருட்டிக் கொண்டு இருப்பது தெரிகிறதா? இன்னும் கண்டுபிடிக்கவில்லையா என்ன?

இதோ நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான அந்த எலியை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 5 நொடியில் கண்டுபிடித்திருந்தால், நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர் எனக் கூறப்படுகிறது. பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் அறிவுத்திறனும் பார்வைத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
சில குறிப்பிட்ட கலவைகளில் நிறம், வெளிச்சம், வடிவம் ஆகியவை நிறைந்திருப்பதால், படத்தில் இல்லாதது இருப்பது போலவும் இருப்பது இல்லாதது போலவும் நமக்கு தெரிகிறது.

news18


 



Post a Comment

0 Comments