போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், இருவரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இந்த இரண்டு தொலைபேசிகளும், ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரிடம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்த இந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் இரண்டு கடவுச்சீட்டுகளும் எப்போது காணாமல்போனது என்பது தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.
இந்த தொலைபேசிகளில் முக்கியமான காணொளிகள், பல்வேறு போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொலைபேசி எண்கள் போன்றவை இருந்ததாக குற்றப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments