இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு எதிரான உலகளாவிய சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் வடக்கு காசாவில் உணவுப் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது குறித்து சுயாதீன விசாரணைக்கு பிரெஞ்சு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வியாழன் அன்று காசா நகரின் நபுல்சி ரவுண்டானாவில் நடந்த தாக்குதலில் குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலுக்கு 29 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மனிதாபிமானமே இல்லாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரையிலும் கொலை செய்கின்றார்கள்.
உலகில் பல நாடுகளும் இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் பிரெஞ்சு அரசும் இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் சீற்றம் கொண்டுள்ளனர்.இஸ்ரேல் பயங்கரவாதிகளின் இந்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தும்படியும்,மேலும் சுயாதீன விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும் என்றும்,அப்படியில்லாத பட்சத்தில் உலகம் மிக மோசமான ஒரு நிலையை சந்திக்கும் என்றும் பல நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உணவு,தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் மரணிக்கும் மக்கள் ஒருபுறம் ,இஸ்ரேல் பயங்கரவாதிகளின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் மரணிக்கும் மக்கள் ஒருபுறமுமாக ,காசா ஒரு மயானமாக காட்சியளிக்கின்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments