Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் : ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்


அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் "மிக முக்கியமான நாள்" எனவும் தம்மை அதிபராக தெரிவு செய்யாவிட்டால் அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் என்று டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓஹியோவில் நடந்த பேரணியில் டொனால்ட் டிரம்ப் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார் அத்துடன் வெள்ளை மாளிகைக்கான தனது பிரசாரத்தை நாட்டிற்கு ஒரு திருப்புமுனையாக அவர் சித்தரித்தார்.

“இதை நினைவில் கொள்ளுங்கள், நவம்பர் 5 - இது நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திகதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று 77 வயதான ட்ரம்ப் தெரிவித்தார்.

நாட்டின் மிக மோசமான அதிபர் ஜோ பைடன் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்க சீனர்கள் திட்டமிட்டுள்ளனர், தாம் அதிபராக பொறுப்புக்கு வந்தால், அவர்களால் ஒரு வாகனத்தைக் கூட அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்ய முடியாமல் போகும் என்றார்.

தாம் அதிபராக தெரிவாகவில்லை என்றால், நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ibctamil


 



Post a Comment

0 Comments