அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சில பனிச்சறுக்குத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சியேரா நெவாடா (Sierra Nevada) பகுதியில் பனிப்புயல் வீசும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதாக BBC செய்தி கூறுகிறது.
மாநிலத்திலுள்ள சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.
3 மீட்டர் உயரத்துக்குப் பனிகொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியேரா நெவாடா மலைப்பகுதியில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்துக்குக் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் ஏற்கனவே 60 செண்டிமீட்டர் உயரத்துக்குப் பனி கொட்டிக்கிடக்கிறது.
இன்னும் மோசமான பனிப்பொழிவுடன் அந்த மலைப்பகுதியில் பலத்த காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பகுதியை நோக்கி நகரும் புயல் மேலும் வலுவடையலாம்; அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும்.
பயணங்கள் ஆபத்தாக அமையலாம்; பனிச்சரிவுகளும் ஏற்படலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Yosemite தேசியப் பூங்காவும் Lake Tahoe சுற்று வட்டாரத்திலுள்ள பனிச்சறுக்குத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இதுவரை யாருக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை;
வாகன விபத்துகள், கார்ச்சறுக்கு போன்ற சம்பவங்களைக் கையாண்டதாகக் கலிபோர்னியா அதிகாரிகள் கூறினர்.
யூட்டா (Utah), அரிஸோனா (Arizona) மாநிலங்களில் பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நாளை நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments