மருதமுனை மதரஸா ஒன்றில் புனித ரமலான் மாதத்தில் நோன்பாளியாக இருக்கும் நிலையில் சிறு வயதை உடைய மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு போன்றவை எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் சிறு வயதை உடைய மானவர்களுக்கு இவ்வாறான சித்திரவதை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் தர்கா நகரில் ஒரு மாணவனை ஒரு ஒரு மெளலவி கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றும் பதிவாகியது. மௌலவிக்கு எதிராக நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை சீரான நிலைக்கு கொண்டு வந்தது.
சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பதாக காலியில் ஒரு மாணவன் தாக்கப்பட்டதனால் ஒரு மதரஸா மூடப்பட்டது.
அதற்கு முதல் ஒரு மதரஸா ஒன்றில் ஒரு மாணவனை கொலை செய்த சம்பவம் பதிவாகியது. மதரஸாக்களின் நிலையும், அங்கு கற்பிக்கும் உலமாக்களின் நிலையும் தொடர்ந்தும் இவ்வாறு இருக்குமாக இருந்தால் நமது நாட்டில் உள்ள மதரஸாக்களின் நிலைக்கு பொறுப்பு கூறுவது யார் ?
இது சம்பந்தமாக மதரஸாக்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments