குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
அடுத்தவொளை புகழ்ந்து பேசுதது எல்லாமே, இல்லாதவொளுக்கு எதையாவது கொடுத்து ஒதவுவதவொளைப் பத்திய பெருமையாத் தான்.
இருக்கும்.
குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
இந்த ஒலகத்துல, என்னைக்கும் சிறந்ததாகவும் அழியாமலும் இருக்கப் போவது புகழ் தான். அதைத் தவிர வேற ஒண்ணும் இல்லை.
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
எத்தனை தும்பம் வந்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தியால புகழை வளர்த்துக் கொள்வதும், செத்துப்போனாக்கா, அதுலகூட புகழை நிலை நிறுத்துவதும் திறமை சாலிகளுக்கு மட்டுமே நடக்கும். மத்தவொளுக்குல்லாம் அத்தனை லேசுல இப்படி நடக்காது.
குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
நல்ல பேரோடும் புகழோடும் வாழமுடியாத ஒருத்தன் அதுக்கு அவனையே தான் நொந்து கொள்ளணும். இதை விட்டுட்டு தன்னைப்பத்தி மோசமா சொல்லுதவனுவ மேல கோவப்படுதது சரி கெடையாது.
குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
நம்ம காலத்துக்குப் பொறவும் நம்ம பேர் நிய்க்கும்படி நடக்காட்டா, நாம வாழ்ந்த வாழ்க்கைக்கே அது ஒரு பழின்னு ஊர்க்காரங்க சொல்வாங்க.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments