201. வினா : யாருக்கு அவ்வுலகம் இல்லை?
விடை : அருள் இல்லாதவர்க்கு
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.(247)
202. வினா : யாருக்கு இவ்வுலகம் இல்லை?
விடை: செல்வம் இல்லாதவர்க்கு.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.(247)
203. வினா : வலியார் முன் தம் நிலை - எதைக் குறிக்கும்?
விடை: தன்னிலும் வலிமை நிறைந்தவனைத் துன்புறுத்தியரைக் காட்டும்.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.(250)
204. வினா : பொருள் யாரிடம் நிற்கும்?
விடை : போற்றுபவரிடமே பொருள் நிற்கும்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.(252)
205. வினா : எது தவத்தின் வடிவம் ஆகும்?
விடை: தன் துன்பம் பொறுத்து, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பது
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.(261)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments