Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -47


குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே 
ஒண்ணுதல் செய்தது கண்டு.
அம்மாடி எழுந்திரு! 
பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு! 
ஏம்மா அழற? 
கண்ணெல்லாம் செவந்திருக்கு! 
முடிகலஞ்சு நெத்தியில விழுந்திருக்கு! 
என்ன கோலம் இது! 
அப்பா! அப்பாவ நெனச்சுதாம்மா! 
தலவலிச்சுச்சு! கண்ல இருந்து 
தண்ணியா வருதும்மா! 
அடச்சி! வேலநிமித்தம் 
ஊருக்கு போயிருக்காரு! 
அப்பா இன்னக்கி நீ
பள்ளிக்கூடத்துல இருந்து 
வர்ரதுக்குள்ள வந்துருவாரு! 
வெளியில் போவோம்! 
அழக்கூடாது! சரியா?

குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே 
எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

அம்மா! 
உங்கமகளுக்கு 
எல்லாவகையான சிகிச்சையும்
 கொடுத்தாச்சு! 
நோய் குணமாகல! 
உங்க வீட்ல ஏதாவது 
சிக்கல்னா ஒளிக்காம சொல்லுங்க! 
பாட்டி பாட்டினு சொல்றா! 
என்னம்மா நடந்துச்சு? 
மருத்துவரய்யா! நாலுநாளக்கி 
முன்னால் அவருடைய அம்மாவை 
அவருமுதியோர் இல்லத்துல 
சேத்துட்டாரு! 
குழந்தபாட்டி! பாட்டினு
 கதறுச்சு! அடுத்தநாள்ல இருந்து 
உடம்பு சரியில்லாம போயிடுச்சு! 
மனமே! நோய்க்கு மருந்த 
என் அம்மாவாயால சொல்லவச்சுட்ட!

குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு.
என்தோழி பாலாமணி 
போறா! 
என்னைப் பாத்தும் 
பாக்காத மாதிரி போறா! 
போகட்டுமே! 
அவ ஆறாவது! 
நான் அஞ்சாவது! 
அதுக்காக இப்படியா? 
என்னோட நட்பை 
மதிக்காதவள 
நெனச்சு நீமட்டும் 
ஏன் துடிக்கின்றாய் நெஞ்சே! 
இந்த அறியாமை 
உனக்குத் தேவையா?

(தொடரும்)



 



Post a Comment

0 Comments