ஏகத்துவ நம்பிக்கை கொண்ட பழைமையான யூத மதத்தின் அடிப்படை சட்டங்களும் கொள்கைகளும் பைபிளின் முதல் ஐந்து தோராவிலிருந்து பெறப்பட்டுள்ளன.
தோராவிலிருந்த மிக முக்கியமான போதனையும் கொள்கையும் என்னவென்றால், "கடவுள் இருக்கிறார்; அவர் அசாதாரணமான மற்றும் நித்தியமானவர். அவர் எல்லா மக்களுக்கும் நியாயமான மற்றும் இரக்கமுள்ள செயல்களைச் செய்ய விரும்புகிறார். எல்லா மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள்" என்பதாகும்!
இன்று இஸ்ரேலிய யூதர்கள் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளுக்கு சேவை செய்கிறார்களா? இல்லவே இல்லை!
எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும், வயோதிபர்களையும், தாய்மார்களையும் காஸாவில் அவர்கள் கொன்று குவித்து வருகின்றார்கள்.
ஜேர்மனியில் ஆரிய வம்சத்தை உயர்த்துவதற்காக மனிதாபிமானமற்ற முறையில் மற்ற மனிதர்களை வேட்டையாடி அழித்த ஒருவனை ஹிட்லர் என்று வரலாறு பேசுகின்றது.
கடந்த நூற்றாண்டைய வரலாற்றில் ஹிட்லருக்கு ஒப்பான கொடுமையான பாஸிஸ்ட் தவைர்களாக ஸ்பெயினில் பிராங்கோ, இத்தாலியில் பெனிட்டோ முசோலினி, ஜப்பானில் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ போன்றோர் பேசப்படுகின்றனர்.
இஸ்ரேலில் இன்று நடைபெற்று வருவது அந்த ஹிட்லர் என்பவனுக்கே சவால்விடுவது போன்றதொரு நிகழ்வாகும்!
20.4.1889ல் ஜேர்மனியின் ஆதிக்கத்திலிருந்த ஆஸ்திரியாவிலுள்ள "Braunau" என்ற இடத்தில் அலோய்ஸ் ஹிட்லர் என்பவரின் இரண்டாவது மனைவியான கிலாரா போல்ஸிக்கு மகனாகப் பிறந்தவன் அடோல்ப் ஹிட்லர். தகப்பன் பெயர் தெரியாத ஒருவனைத் தகப்பனாகக் கொண்ட இவன், பணக்கார வீடொன்றில் வேலைக்காரியாயிருந்த பெண் ஒருத்திக்குப் பிறந்தவன் என்றும், இவனது தந்தை ஒரு யூதனாகக் கூட இருக்கலாமென்றும் நம்பப்படுகின்றது!
அடோல்ப் ஹிட்லரின் தகப்பனின் முதல் மனைவியின் மகன் குற்றச் செயல் புரிந்த காரணத்தால் சிறை சென்றபோது, இரண்டாவது மனைவியின் மகனான அடோல்ப் ஹிட்லராவது நன்றாகப் படிக்கவேண்டும் என்ற தந்தையின் ஆசையை இவனால் நிறைவேற்றி வைக்க முடியாமற் போய்விட்டது.
இளவயதில் படிப்பில் ஆர்வம் காட்டாத இவனுக்கு ஓவியனாக வரவேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்ததால், அதில் ஈடுபாடு கொண்ட ஹிட்லர், வியன்னாவில் சிலகாலம் ஓவியராகப் பணிபுரிந்தபோது யூதர்களிடம் அவனுக்குத் தீராத வெறுப்பு ஏற்படலானது.
வித்தியாசமான முறையில் சிந்திக்கும் இவனுக்கு புத்திசாலிப் பெண்களையும், தன்னைவிட அரசியல் தெரிந்தவர்களையும் பிடிக்கவே பிடிக்காது.
பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜேர்மனியுடன் நடாத்திய முதலாம் உலகப் போரில் அடோல்ப் ஹிட்லர் ஜேர்மனிய சிப்பாயியாகப் போர் புரிந்தபோது, இங்கிலாந்துப் படை வீசிய குண்டினால் ஹிட்லரின் கண் பாதிக்கப்பட்டது.
யுத்தத்தில் ஜேர்மன் தோற்றபோது, ஜேர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்த பிரான்ஸ் உட்பட, நேச நாடுகள் தங்களைப் போருக்கிழுத்த குற்றத்திற்கான நட்ட ஈடாக, பெருந்தொகையைக் கட்டவேண்டும் என்று ஜெர்மனியை வற்புறுத்தியது.
போரில் தோல்வியுற்றது மட்டுமல்லாது பாரிய நட்ட ஈடான இழப்பை எதிர்கொண்ட ஜேர்மனியின் பொருளாதாரம் சிதைந்து, மக்கள் துன்பமும் துயரமும் பட்டதால் 1920ம் ஆண்டைய கால கட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் அங்கு வெடிக்கலாயின.
ராணுவ வீரராக ஹிட்லர், முதல் உலகப் போரில் தோற்றபோது, தமது இழப்புகளுக்கும் தோல்விக்கும் யூதர்களையே சாடினான். அப்போதே அனைத்து யூதர்களையும் அழிக்க ஓர் இலக்கை ஹிட்லர் உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஹிட்லர், தேசிய சமூக ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து அதன் தலைவரானான். அப்போது யூத-விரோத பிரசாரம் கட்சியின் அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருஉந்ததைக் கவனித்தான். இதனால், அதிகாரத்துக்கு வருவதற்கு, ஜெர்மனிய மக்களின் பெரும்பான்மையினரிடம் அதிகரித்து வரும் யூத-விரோதத்தைப் பயன்படுத்த நினைத்தான். அத்துடன், ஜேர்மனியின் துயரநிலைக்கு பணம் படைத்த யூத முதலாளிகள்தான் காரணம் என்பதையும் அவன் நம்பினான்.
அக்காலை ஜேர்மனியில் பணமுதலைகளாக யூதர்களே இருந்தனர். அவர்கள் ஜேர்மனியர்களைச் சுரண்டி வாழ்ந்தனர். அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து ஜேர்மனியர்களை ஒட்டாண்டிகளாக்கினர்.
அவர்கள் எப்போதும் முறன்பாடுடையவர்களாகவும், பொய் பேசுவோராகவும், வாக்குறுதி மாறுபவர்களாகவும், ஒப்பந்தங்களை மீறுபவர்களாகவும், சதி செய்பவர்களாகவும், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பாரபட்சமின்றிக் கொலை செய்பவர்களாகவும் இருந்து வந்ததை தனது வாலிபப் பருவம் முதலே ஹிட்லர் உணர்ந்து வந்துள்ளான்.
மக்களைக் கவரும் விதத்தில் பேசும் திறமை கொண்டிருந்த ஹிட்லர், இதனை மக்கள் புரியும்படி தனது பிரசார மேடைகளில் பேசி, மக்களை உசுப்பேத்தலானான்.
தன்னை அதி தீவிர நாட்டுப் பற்றுள்ள ஒருவனாகக் காட்டிக் கொண்ட அவன், தான் தொடங்கிய தேசிய அரசியல் கட்சி (நாஷி) மூலம், யூதர்களுக்கெதிராக மக்களிடம் செய்த பிரசாரத்தால், ஜேர்மன் மக்கள் தங்களைவிட யூதர்களை வெறுக்கலாயினர்.
இதனை மையப்படுத்தியே ஹிட்லர் தனக்குப் பிடிக்காதவர்களையும், இடதுசாரிகளையும் கொலை செய்ய ஆரம்பித்தான். இதனால் அவனது தேசிய அரசியல் கட்சி தடைசெய்யப்பட்டு, 1923ல் ஹிட்லர் சிறை சென்று, ஒரு வருடத்தை அங்கு கழித்தான். தனது சிறை வாழ்க்கையையும் பிரெஞ்சுப் படுத்திக் கொண்ட ஹிட்லர், சிறையிலிருந்தபோது ‘எனது போர்’ என்ற ஒரு நூலை எழுதினான். அவன் சிறையில் இருந்து வெளிவந்ததும், செய்த பிரசாரத்தால் அவனது கட்சிக்கு வாக்குகள் குவியலாயின.
1932ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, வொன் ஹின்டன்போர்க் என்பவன் ஜேர்மனியின் தலைவரானான். அந்த அரசில் ஹிட்லருக்கு "சான்ஸிலர்" பதவி கிடைத்தது.
அவனது வசீகரமான பேச்சால் அரச நிர்வாகத்திலிருந்த பெரிய தலைகளைத் தன் வசப்படுத்தினான். அவனின் திட்டம்தான், 1933ல் யூதர்களின் உடமைகளை அவர்களிடமிருந்து பறித்து தேசியமயமாக்க வைத்தது.
1934ம் ஆண்டு ஜேர்மன் தலைவர் ஹின்டன்போர்க் இறந்ததும் ஹிட்லரின் ஆளுமை கூடியது. ஹிட்லரை எதிர்ப்பவர்களை அவனுடைய ஆதரவாளர்கள் தொலைத்துக் கட்டினர்.
ஹிட்லருக்கு, இடதுசாரிகளையோ அல்லது முதலாளித்துவவாதிகளையோ பிடிக்காது. ஜேர்மனியை அதிபெரும் நாடாக்க எவரையும் கொலை செய்து, தனது நோக்கை அடைய, பிரமாண்டமான ‘ஜேர்மன் தேசிய’ உணர்வலையை உண்டாக்கினான். பணபலமுள்ள யூதர்களை வளைத்துப் பிடித்துப் பணம் பறிக்கலானான். அதனால், பணம்படைத்த யூதர்கள் பலர் வேறும் நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அப்படித் தப்பியோடியவர்களுட் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும், பலர் பலஸ்தீனத்துக்குள்ளும் நுழைந்தனர்.
அடால்ஃப் ஹிட்லரைப்போல வரலாற்றில் வேறு எந்த ஆட்சியாளரும் யூத மக்களுக்கு மரணத்தையும் துன்பத்தையும் கொண்டு வரவில்லை.
இந்தக் கால கட்டத்தில் அமெரிக்கா பொருளாதார ரீதியாகத் திணறிக் கொண்டிருந்தது. ஜேர்மனிலிருந்து ஓடிய மனிதாபிமானமற்ற யூதர்களாலும், கறுப்பர்களாலும் அமெரிக்கா சிதைவடையும் என ஹிட்லர் நினைத்தான்.
ஐரோப்பாவின் 22 நாடுகளிலுமுள்ள 9 கோடி யூதர்களையும் வளைத்துப் பிடித்துக் கொலை செய்து அழிக்கத் திட்டமிட்டான். ‘ஆரிய வம்சத்தை’ ஐரோப்பாவின் மேன்மையான ஆளும் வர்க்கமாக்கக் கனவு கண்டான். அத்துடன் பிரித்தானியாவை அழித்து இங்கிலாந்தை விடப் பிரமாண்டமான சாம்ராச்சியத்தை, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்காவில் இணைத்து உருவாக்கக் கனவு கண்டான்.
ஹிட்லர், 1939ம் ஆண்டு படையெடுத்து நான்கு மாதத்தில் 75,000 பொது மக்களைக் கொன்று போலந்தை வெற்றி கொண்டான். அதைத் தொடர்ந்து நோர்வே நாட்டை ஒரே ஒரு மாதத்தில் வென்றான்.ஒல்லாந்தை நான்கு நாட்களிலும், பெல்ஜியத்தை மூன்று வாரங்களிலும், பிரான்ஸை ஆறு வாரங்களிலும் வென்றான்.
1941ம் ஆண்டு லண்டனில் குண்டு மழைபொழிந்து துவம்சம் செய்தான். இதனால், கிட்டத்தட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஹிட்லரின் பிடிக்குள் வந்தன.
ஹிட்லர் தனக்குப் பிடிக்காதவர்களையும் யூதர்களையும் கொலை செய்யப் பல்வேறு முறைகளைப் பாவித்தான்.
இவனது கொடுமைகளைத் தாங்காத வொன் ஸ்ரவன்போர்க் என்ற ஜேர்மன் போர்த்தளபதி ஹிட்லரைக் கொலைசெய்ய அவனின் மேசைக்கடியில் குண்டு வைத்தான்; அந்தக் குண்டு வெடித்தபோதிலும், ஹிட்லர் தப்பி விட்டான். அந்தத் தளபதியையும், தனக்கு எதிரானவர்கள் என்ற சந்தேகப்பட்ட 4900 பேர்களையும் தனது கைகளாலேயே கொலை செய்தான்.
ஹிட்லரின் கொடுமையால்: ஜேர்மன் இடதுசாரிகள் 60,000 பேர் நாட்டை விட்டே ஓடினர். பல்லாயிரக் கணக்கான தொழிற் சங்கவாதிகள் சிறைபிடிக்கப் பட்டனர். அவனைக் கேள்வி கேட்ட ஜேர்மன் மக்கள் 150,000 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். அத்துடன், ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்தும். ஐந்து கோடி ஜிப்சிகளும் கொலை செய்யப்பட்டனர்.
யூதர்களைக் கொல்ல பல முறைகள் முன்னெடுக்கப் பட்டன. வைத்திய பரிசோதனை செய்யப் பட்டுப் பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதிகப்படி வேலைவாங்கியும், பட்டினி போட்டும் இன்னும் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இந்த முறைகளால் கோடிக்கணக்கானவர்களை விரைவாகக் கொலை செய்ய முடியாதபடியால். பெல்செக், ஆஷ்விட்ஸ், டச்சாவ் ஆகிய மூன்று நாஷிப் படை முகாம்களில் யூதர்களுக்கு நச்சுவாயின்மூலம் அதிவிரைவான கொலைத் திட்டங்களை அமுல் படுத்தினான். ஆஷ்விட்சில் மட்டும் ஒரு கோடி யூதர்களும் வேறு பலவிடங்களில் ஒட்டு மொத்தமாக 6 கோடி யூதர்கள் கொலை செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஹிட்லரின் ஆட்சியின் கீழ், ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகளாக யூதர்கள் குறிவைக்கப்பட்டனர்.
ஜேர்மனிக்கு ஒரு பிரமாண்டமான நாடு தேவை என்று நினைத்த ஹிட்லர்,1941ல் சோவியட் யூனியனுக்குப் படையெடுத்தான். ஒரு கிழமையில் ஹிட்லரின் படையால் 150.000 சோவியத் சிப்பாய்கள் இறந்தார்கள்; பலர் காயம்பட்டார்கள். மூன்று கோடி சோவியத் சிப்பாய்கள் போர்க்கைதிகளாயினர். உக்ரேனில்,100.000 பொது மக்கள் பட்டினியால் இறந்தார்கள்.
சோவியத் யூனியன் பல இழப்புக்களைக் கண்டாலும் நீண்டகாலம் போராடி, ஜேர்மனியைப் பின்வாங்கப் பண்ணியது.
ஜேர்மனியின் கொடுமை தாங்காத பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஹிட்லரை அழிக்கத் திட்டம் போட்டன. ஹிட்லரால் பலகோடி மக்களையிழந்த சோவியத் யூனியன் 1944ல் ஜேர்மனியுடன் போர் தொடுத்தது. சோவியத் யூனியனின் படைகள் 27.1.1945ல் ஆஷ்விட்ச் வதைமுகாமை வளைத்துப் பிடித்து அங்கிருந்த யூதர்களை விடுவித்தது.
இந்நிலையில், ஜேர்மனியிலிருந்து அமெரிக்கா சென்ற யூதர்களின் பிரமாண்டமான பொருளாதார சக்தியால் தனக்கு அழிவு வரும் என்று நினைத்திராத ஹிட்லர், தனது தோல்வியால் விரக்தியடைந்து, 30.4.1945ல் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டான்.
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments