Ticker

6/recent/ticker-posts

"பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர்த் தகுதி வழங்கும் தீர்மானத்தைச் சிங்கப்பூர் மிகக் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுத்தது"


ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபை வாக்களிப்பு குறித்துச் சிங்கப்பூர் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், கவனமாகப் பரிசீலித்தபின் தீர்மானத்தை ஆதரிக்கச் சிங்கப்பூர் முடிவெடுத்ததாகக் கூறினார்.

பொதுச் சபையில் அந்தத் தீர்மானத்தை ஐக்கிய அரபு சிற்றரசு முன்வைத்தது.

ஐக்கிய நாட்டுச் சாசனத்தின் நான்காம் அத்தியாயத்தின் அடிப்படையில், உலக நிறுவனத்தில் உறுப்பியம்பெறப் பாலஸ்தீன தேசத்துக்குத் தகுதி உண்டு என்று தீர்மானம் கூறியது.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் தீர்மானத்துக்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

டாக்டர் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் எப்போதுமே இருநாட்டுத் தீர்வை ஆதரிப்பதைச் சுட்டிக் காட்டினார். அந்த அடிப்படையிலேயே தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாக அவர் சொன்னார்.

seithi


 



Post a Comment

0 Comments