Ticker

6/recent/ticker-posts

MI vs SRH : கொஞ்சம் மிஸ் ஆகிருச்சு.. அடுத்த சில போட்டிகளில் பட்டாசாய் இருக்கும்.. கம்மின்ஸ் வார்னிங்-(Points Table)


மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் குறைவான ரன்களை சேர்த்ததே தோல்விக்கு காரணம் என்று ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் விளாசியது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 6 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 102 ரன்களை விளாசினார். அதேபோல் அவருக்கு உறுதுணையாக விளையாடிய திலக் வர்மா 32 பந்துகளுக்கு 37 ரன்களை விளாசினார். இதன் மூலம் மும்பை அணி 4வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல் தோல்வி காரணமாக ஐதராபாத் அணி, அடுத்த 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், நிச்சயம் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததாக நினைக்கிறேன். வான்கடே மைதானத்தில் டிஃபென்ஸ் செய்வது எளிதல்ல. தொடக்கத்தில் கொஞ்சம் கீழே இருந்தாலும், ஆட்டத்தில் நிச்சயம் சவாலாக விளையாடினோம்.

அதேபோல் தொடக்கத்தில் பவுலர்களுக்கு பிட்சில் உதவி இருந்தது. ஏனென்றால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது 12 ஓவர்கள் வரை பவுலிங் செய்ய ஏதுவாக இருந்தது. அதனால் நிச்சயம் எங்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என்று நம்பிக்கையாக இருந்தோம். சன்விரை இம்பேக்ட் வீரராக களமிறக்கியதால் தான் 170 ரன்களை சேர்க்க முடிந்ததாக நினைக்கிறேன். இல்லையென்றால் 150 ரன்கள் தான் சேர்த்திருப்போம். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தோம்.

ஆனால் டி20 கிரிக்கெட் நாம் நினைத்தது போல் நடக்காது. நிச்சயம் மும்பை சிறந்த அணி. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் சிறந்த வீரர். அடுத்த போட்டியில் ஐதராபாத்தில் விளையாடுகிறோம். சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். பிளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் போது, எங்களின் விதி என்ன என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம். நிச்சயம் அடுத்த சில போட்டிகள் பட்டாசாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

mykhel

IPL 2024 - Points Table




 



Post a Comment

0 Comments