
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) அந்நாட்டின் உயர் அதிகாரிகளைக் கத்தாருக்கு அனுப்பியிருக்கிறார்.
காஸா போர் நிறுத்த உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் கலந்துகொள்வர்.
பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்தும் பேசப்படும்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப்பின் மத்தியக் கிழக்குத் தூதரைத் திரு நெட்டன்யாஹு சந்தித்த பிறகு குழு கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இஸ்ரேலின் உயர் அதிகாரிகளுடன் பைடன் நிர்வாகத்தின் பிரதிநிதியும் இணைந்திருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அதிகாரபூர்வமற்ற சமரசப் பேச்சு கடந்த வாரயிறுதியில் கத்தாரில் தொடங்கியது.
இம்முறை பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments