Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாகிஸ்தான் தலைவிதியே மாற்றும் புதையல்.. டன் டன்னாக நதியில் பரவி கிடக்கும் தங்கம் - யப்பா இவ்வளவு மதிப்பா?


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிந்து நதி படுகையில் சுமார் 42 லட்சம் சவரன் தங்கம் புதைந்து கிடப்பதாக அந்நாட்டு முன்னாள் அமைச்சரே கூறியது, அந்நாட்டின் மீது உலக நாடுகளின் பார்வையை திருப்பி உள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி, இந்தியா வழியாக பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் மையமாக இருந்து வந்த சிந்து சமவெளி நாகரிகம், அதன் கரையில் செழித்து வளர்ந்தது. 3 ஆயிரத்து 200 கிலோமீட்டர் நீளமுள்ள சிந்து, கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை தீர்த்து வருகிறது. இந்த நிலையில், சிந்து நதியில் இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டெக்டானிக் பிளேட்டுகள் மோதி மலைகள் உருவாகும் போது, அரிப்பு காரணமாக தங்கத் துகள்கள் உருவாகி இருக்கலாம் என்றும் அவை சிந்து நதியின் வேகத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவை, சிந்து மற்றும் காபூல் ஆறுகள் இணையும் இடத்தில் பல நூறு ஆண்டுகளாக குவிந்து புதைந்து போயி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, பாகிஸ்தானின் அட்டோக்கிலிருந்து தர்பேலா மற்றும் மியான்வாலி வரை 32 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த தங்க புதையல்கள் பரவி கிடப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி பகுதிக்கு படையெடுக்கத் துவங்கினர். குறிப்பாக குளிர்காலத்தில் நதியில் தண்ணீர் மட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ஏராளமானோர் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டி தங்கத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது சட்டவிரோதம் என்பதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம், தங்கம் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக கூறப்பட்டாலும், கனிம வளத்துறையினர் அதில் கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. மணல் மற்றும் ஜிங்க் சுரங்கம் அமைப்பதற்கான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் இதனால் தங்கம் குறித்த ஆய்வுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 127 இடங்களில் மாதிரிகள் எடுத்து பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சி மூலம் தங்கம் புதையல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்க அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் தெரிவித்துள்ளார்.

இது பஞ்சாபின் இயற்கை வளங்களின் மகத்தான ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் பெருமிதம் கூறியுள்ளார். மேலும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு புதிய வாய்ப்புகளுக்கான களத்தை அமைத்துத் தரும் என்றும் 
பொருளாதார சிக்கலில் சிக்கி பாகிஸ்தான் தவித்து வரும் நிலையில் அங்கு டன் கணக்கில் தங்கம் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அந்நாட்டின் தலைவிதியை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments