Ticker

6/recent/ticker-posts

Ad Code



வெள்ளை மாளிகை தெளிவாகச் சொன்ன பின்பும்.. எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!


அமெரிக்க அரசு ஊழியர்கள் வொர்க் ரிப்போர்ட் அனுப்பவில்லை என்றால் வேலை பறிபோகும் என டோஜ் தலைவர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா அரசின் செலவுகளைக் குறைக்கும் பணியில் அந்நாட்டின் செயல்திறன் துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதில் ஒரு பகுதியாக அரசுத்துறைகளில் பணிநீக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கான வொர்க் ரிப்போர்ட்டை, அரசுத் துறை ஊழியர்கள் அனுப்ப வேண்டும் என்று அத்துறையினர் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனித வள அதிகாரிகளிடம் இருந்து மெயில் வரும் என்றும், அதற்கு பதில் அளிக்காத ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகக் கருதப்படுவார்கள் என்றும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கப் பதிவில் தெரிவித்துள்ளார். யாரையும் பணியில் இருந்து நீக்க மஸ்க்குக்கு எந்த அதிகாரமும் இல்லை என வெள்ளை மாளிகை சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

news18

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments