
சென்னை, ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள் .
ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள போக்குவரத்து சமிக்ஞையில் தற்போது வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டு, டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடி செலவில் U' வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையினை கடக்க ரூ.11.30 கோடி செலவில் திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலை சாலையின் (West Avenue Road) குறுக்காக ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் ஆகும். . 12.50 மீ நீளமுள்ள 16 கண்களை கொண்ட. ராஜீவ் காந்தி சாலையில் ஒரு ஏறு சாய்தளம் , ஒரு இறங்கு சாய்தளம் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ. ஆர். சாலையில் ஒரு இறங்கு சாய்தளம் ஆகியவற்றை கொண்ட இந்தப் பாலத்தினை ஒட்டி ராஜீவ் காந்தி சாலை மற்றும் ,தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலைகளில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் பகுதியில் இருந்து, மத்திய கைலாஷ் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையினை நோக்கி செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சமிக்ஞைக்காக காத்திருக்காமல் இந்த பாலத்தின் வழியாக ஏறி அந்தந்த சாலைகளில் இறங்கி விரைவாக செல்ல இயலும்.
அதே போல திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலையின் (West Avenue Road) குறுக்கே, இரு முனைகளிலும் நகரும் படிக்கட்டுகளுடன் (Escalators), 5.25 மீ அகலமும் 155 மீ நீளமும் கொண்ட ஒரு புதிய நடைமேம்பாலம் (Foot Over Bridge) கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய நடை மேம்பாலம், திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முன்பாக ராஜீவ் காந்தி சாலையின் குறுக்கே ஏற்கனவே உள்ள இரும்பு நடைமேம்பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் புதிய நடை மேம்பாலம் வழியாக மேற்கு நிழற்சாலை சாலையினை (West Avenue Road) பாதுகாப்பாக கடந்து திருவான்மியூர் MRTS நிலையம் சென்று வரவும், ராஜீவ் காந்தி சாலையினை கடந்து டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சிரமமின்றி சென்று வரவும் இயலும்.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments