
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் ஆடவர் மரக்கட்டிலைக் காராக மாற்றி அதனை சாலையில் ஓட்டி, காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வழக்கமான கட்டிலில் இருப்பது போல அந்தக் காரில் மெத்தைக்கான உறையும் தலையணையும் உள்ளதைக் காணொளியில் காணமுடிந்தது.
கார்களுக்கு இரு புறத்தில் இருக்கும் கண்ணாடிகளையும் ஆடவர் கட்டிலின் இரு புறத்திலும் பொருத்தியுள்ளார்.
கட்டிலின் நடுவினில் ஓட்டுநருக்காக உருவாக்கப்பட்ட பகுதியில் அமர்ந்து அவர் அந்த விநோதமான காரை ஓட்டுவதை மற்ற வாகனமோட்டிகளும் வியந்து பார்ப்பதும் காணொளியில் தெரிகிறது.
இதுபோன்ற கார் இருந்தால் போக்குவரத்து நெரிசலின்போது உறங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என இணையவாசிகள் நகைச்சுவையாகக் கருத்து பகிர்ந்துள்ளனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments