Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-100


படைத்தலைவன் அவ்விதம் கூறிச் சென்றதும் கூடி இருந்த கூட்டத்துக்குள் மெதுவான ஓசையில் ஒரு சலசலப்பு என்னவாக 
இருக்கும் அது இப்படி இருக்குமோ?  அப்படி இருக்குமோ? என்று அவர்களுக்குள்ளே கேள்வியும் விடையும் பகிர்ந்து கொண்டு இருக்க பொறுமை இழந்த முணியாண்டி கொஞ்சம் உரக்கவே கூறினான். 

"எதுவா இருந்தாலும் சரி எனக்கு பிரியாணி நிறையவே வாங்கித் தாங்க  பாட்டி" என்று. குரல் கேட் பக்கம் அரச சபையில் அமர்ந்தோர் விழி அத்தனையும் நோக்கியது .

அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த ஓர் ஆண் எழுந்து கூறினான்.
"மன்னிக்க. அனைவரும் இந்தப் பையன் கொஞ்சம் புத்தி சுவாதீனம் உடையவர்" என்றான் .

மகாராணி புன்னகையோடு கை அசைத்து "அமர்ந்திடும் "என்றார் யாரும் அதை பெருசு படுத்தவில்லை அத்தோடு கூச்சல் குறைந்து கொண்டது வாத்தியம் ஒலி  மீண்டும் வருவது போன்று ஓசை அருகாமையிலே ஒலித்தது .
அவ்வேளை  அரசியின் விழியும் குழந்தை போல் எட்டி எட்டி நோக்கியது. வேகமாய் சில பணிப்பெண்கள் கரங்களில் உதிர் மலர்களோடு இரு புறம் பிரிந்து வரிசை கட்டி நின்று கொண்டனர் .

அதையெல்லாம் பார்க்கும் போது நாட்டு மக்களுக்கு மட்டும் இல்லை அமர்ந்திருந்த பலருக்கு  நெஞ்சில் கேள்வி எழுந்தது.' யார் வருகைக்காக. இத்தனை ஏற்பாடு  அரசி எதுவாக இருந்தாலும் முன்னரே அறிவித்து விடுவாரே இதை மாத்திரம் ஏன் ?அறிவிக்காது ஏற்பாடு செய்தார்' என்று தங்களைத் தாங்களே உள்ளூரம் கேள்விகளால் குடைந்து கொண்டனர் .

மூத்த மருத்துவருக்கு மட்டும் புத்தி திசை மாறியே போய் சிந்தித்தது.  'இந்தப் பொடிப் பயலை அனுப்பி விட்டு  என்னை அறிவித்து ராஜகுமாரியை சபையின் முன் என்னோட பொறுப்பில் தருவதற்காக இந்த ஏற்பாடோ ? இருக்கும் நான் பழமையான மருத்துவர் அல்லவா? என்னைப் பற்றி  மந்திரியாரே கூறி இருக்கலாம்' என தன்னைத் தானே புகழ்ந்து பெருமிதம் கொண்டார் . 

ஓசை நெருங்கிக் கொண்டே வருவது அறிந்து எல்லோர் விழியும் வழி நோக்கியது . படைத் தலைவன் குதிரை முன் வர பின் சில 
காவலர்கள் நடையில் வர இடையே பல்லக்கு சுமந்த படி நான்கு பேரும் பல்லக்கின் பின்னாலே இரு பெண் தோழிகளும் அதைத் தொடர்ந்து வாத்தியமும் காவல்காரர்களும் வருவதைக் காண முடிந்தது .

அருகே பல்லக்கு வந்ததும் அரசி எழுந்து ஓடினார் .அரசி எழுந்ததுமே அனைவரும் எழுந்து கொண்டனர். 

பல்லக்கை மெதுவாக கீழே இறக்கியதும் திரை நீக்கினாள் ராஜகுமாரி .
 
பொன் முகம் கண்டு மின் ஒளி பிறந்தது. மகாராணியின் கண்களில் மட்டும் இல்லை காட்சியைக் கண்ணுற்ற அனைவரின் கண்களுக்குள்ளும் அதே நிலையே. 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments