Ticker

6/recent/ticker-posts

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 வது இடம்!


ஊழல் அடிப்படையில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பலர் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறியுள்ள அவர், நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணி என்றும் கூறியுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டம் குறித்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் 180 நாடுகளை அழைத்து ஊழல் குறித்த அளவுகோலை உருவாக்குகிறது. ஊழல் குறைவாக உள்ள நாடு முதலிடத்தில் உள்ளது.

ஊழல் அதிகமாகவுள்ள நாடு 180 ஆவது இடத்திலுள்ளது. இலங்கை 121ஆவது இடத்திலுள்ளது.

சில நிறுவனங்கள் இன்று பணம் செலுத்தாமல் தங்கள் வேலையைச் செய்ய முடியாது. இலஞ்சம் வாங்கியதாக முத்திரை குத்தப்பட்ட நிறுவனங்கள் கூட வந்து சொற்பொழிவுகளை வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

itnnews

 


Post a Comment

0 Comments