Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-9


குறள் 37
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை

அறவழி இன்பம் சிவிகைக்குள் உள்ளோன்! மறந்தால் சுமப்போன் துயர்.

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.

வாழ்நாள் முழுதும் விதைக்கும் அறச்செயல் வாழ்க்கையைச் சீராக்கும் கல்.

குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல

அறவழி இன்பமே இன்பமாம் மற்ற வழிவந்தால் துன்பந்தான் செப்பு.

குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

அறவழியைப் பின்பற்று நன்மை திரளும்! புறக்கணித்தால் என்றும் பழி

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments