
பாதாள உலக கும்பல் தாதா பெக்கோ சமனின் மனைவி ஷாடிகா லக்ஷானியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (23) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவருடன் தொடர்பிலிருந்தவர்களின் 13 வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசிய கைது நடவடிக்கையின் போது பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் ஒகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments