Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-9


பாடல் - 17.

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல் 

விளக்கம்: 

செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும், யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல், தீங்குகளையுச்  செய்து விட்டு, அதற்காக  வருந்துவதால் மட்டும் இம்மைக்கும் மறுமைக்குமான செல்வம் வந்து விடாது. 

இதற்காக இறைவனை குறை சொல்வது சரியல்ல. வெறும் பானையை அடுப்பில் வைத்தால் அது பொங்காது. 

பாடல் - 18.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

விளக்கம்: 

பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், ஊரில் உள்ளவர்கள், உற்றார் உறவினர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று பலர் இருப்பார்கள். அவர்கள் கெஞ்சிக்  கேட்டால் கூட, பணம் படைத்த சிலர் எதையும் கொடுத்து உதவ மாட்டார்கள். ஆனால் முன் பின் தெரியாதவர்கள் துன்புறுத்திக் கேட்டால் கொடுத்து விடுவார்கள். 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments