
தேனாட்டம் இனிக்குதே
தேவதையின் பாயாசம்.
தேவாமிருதமாச் சுவைக்குதே
தேடிவந்து கொடுக்கையிலே.
வடிவான வஞ்சிக்கொடியே
வட்டநிலவான பெண்கிளியே
வசியப் பேச்சாலே என்னை
வசியப் படுத்திய பூங்கு.
மனசு எல்லாம் நீதானடி
மத்தாப்புச் சிரிப்புக்காரியே.
மல்லிகைப் பூவாட்டம்
மனக்கிறாயே மாமனோட
மடி சாயும் வேளையிலே.
தேடியே வந்தவளே வாணியே
தேவலோகத் தேவியே
தேரைப்பூச்சி போலே
தேக்கமர மனசுல ஒட்டி நிக்கிறயே.(டி)
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments