Ticker

6/recent/ticker-posts

எதிர்கட்சி ஆசனங்களில் முள்ளம்பன்றிகளே இருக்கின்றன – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார


பாராளுமன்றத்தில் எதிர்கட்சி ஆசனங்களில் முள்ளம்பன்றிகள் அமர்ந்துள்ளனவோ என்று சந்தேகம் எழுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 (23) பாராளுமன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆசனங்களில் முள்ளம்பன்றிகள் இருப்பதுபோல எனக்கு தோன்றுகின்றன.

நாங்கள் பாதாள உலகத்தை நிர்மூலமாக்குவோம் என்று கூறும்போதெல்லாம் அவை குதிக்கின்றன. நாங்கள் அதை காண்கிறோம்.

நாங்கள் நீதியும் நியாயமும் நிறைந்த வளமான நாட்டை உருவாக்குவோம். ஆனால், பாதாள உலக கும்பலுக்கு நல்ல சிறைச்சாலைகளை நாங்கள் அமைப்போம்.” என்றார்.

lankatruth

 


Post a Comment

0 Comments