Ticker

6/recent/ticker-posts

AI-யினால் இவர்களுக்கு எல்லாம் ஆபத்து: எச்சரிக்கும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆதித்ய நாராயணன்


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவில் வேலைகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு டாடா எலெக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஆதித்ய நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். 

AI அச்சம்

 AI வளர வளர வேலை வாய்ப்பு குறையும் என்ற அச்சம் உள்ளது. அதே சமயம் இந்தியா போன்ற நாடுகளில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற கூற்றும் நிலவுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த டாடா எலெக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஆதித்ய நாராயணன் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள தொழிலாளர் தேவை குறித்து அவர் கூறுகையில், "வேலைவாய்ப்பை Short term மற்றும் Long term என்று பிரித்து பார்க்கலாம். இந்தியாவில் எலெக்ட்ரானிக் தயாரிப்பில் ஊழியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது.

ஒரு மில்லியன் பேர் பணியில் உள்ளபோது, அது 2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் பேருக்கான தேவையாக மாற வாய்ப்பு உள்ளது. சீனாவில் இருந்து ஏன் இங்கு வருகிறது என்றால்; இந்தியாவில் தொழிலாளருக்கான செலவு மலிவாக உள்ளது.

இந்திய தொழிலாளிகளை விட சீனத் தொழிலாளிகள் கூடுதல் ஊதியம் பெறுகின்றனர். அதனால்தான் இந்தியா சீனாவிற்கு வலுவான மாற்று என்று நம்பி நிறுவனங்கள் இங்கு வருகின்றன" என்றார்.

AI வேலையை பாதிக்குமா?

மேலும், AI எனும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் குறித்து கூறுகையில், "AI (Artificial Intelligence) நிறைய பேரின் வேலைகளை பறிக்கும் என்று கூறுகிறார்கள். ஆம், ஒரு சில வேலைகளை, குறிப்பாக கணினி சார்ந்த சில பணிகளை AI விரைவாக ஆக்கிரமிக்கும்.

ஒவ்வொரு 10, 20 ஆண்டுகளிலும் இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி வரத்தான் செய்யும். அதனை நாம் ஏற்றுக்கொண்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். AI வந்ததால் Automation என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

சீனாவில் மனிதர்கள் இல்லாமலேயே ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது. அதனை Lights Out தொழிற்சாலை என்றே அழைக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.   

lankasri

 


Post a Comment

0 Comments