Ticker

6/recent/ticker-posts

முகமது சிராஜை டி20 உலககோப்பை தொடருக்கு தேர்வு செய்யாததுக்கு இதுவே காரணம் – ஏ.பி.டி விளக்கம்


இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணியானது இந்த தொடரிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியும் பலமான அணியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட சில அதிரடியான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

அதோடு நட்சத்திர வீரர்கள் சிலருக்கும் இடம் கிடைக்காமல் போய்விட்டது. அதிலும் குறிப்பாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இடம் பெறாததற்கு என்ன காரணம்? என்பது குறித்து ஏ.பி.டி வில்லியர்ஸ் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : முகமது சிராஜ் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டவசமானது தான். அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போனதற்கு காரணமே அணியின் சமநிலையை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுதான்.

ஏனெனில் இந்திய அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். எனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் சற்று பேட்டி தெரிந்த வீரராக இருக்க வேண்டும் என ஹர்ஷித் ராணாவை அவர்கள் தேர்வு செய்துள்ளார்கள். அதேபோன்று மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் முழுநேர வேகப்பந்து வீச்சாளராக இருக்கக் கூடாது என்று தேர்வுக்குழுவினர் நினைத்திருக்கலாம்.

அதனாலேயே முகமது சிராஜை விட்டுவிட்டு ஹர்ஷித் ராணாவை எடுத்துள்ளார்கள். இந்திய அணி தற்போதயெல்லாம் பேட்டிங்கில் அதிக ஆழம் இருக்க வேண்டும் என்பதில் உன்னிப்பாக செயல்படுகிறது. அதுவும் அவரது தேர்விற்கு தடையாக இருந்திருக்கலாம் என்றும் ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil

 


Post a Comment

0 Comments