
ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி இன்று காலையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து ஹவுதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
ஏமனில் இருந்து ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நெகேவில் உள்ள பீர்ஷேபா, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இஸ்ரேலியர்கள் பதறியபடி பதுங்கு குழிகள் நோக்கி ஓட்டம் எடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள், நேரடித் தாக்கங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
ஈரான், பிற பிராந்தியப் பகுதிகளில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தால், நேரடி ராணுவத் தலையீட்டிற்குத் தயாராக இருப்பதாக ஏமன் ஹவுதி போராளிப் படைகள் நேற்று அறிவித்த நிலையில், இந்த முதல் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என ஈரானிய அரசு ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் மேற்கு ஆசியா முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த இஸ்ரேல் முனைவதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது.
இத்தகைய திட்டங்களையும், அவற்றுக்குப் பின்னால் இருப்பவர்களையும் எதிர்ப்பது பிராந்திய மக்களின் சட்டபூர்வமான உரிமை என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என ஏமன் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்த ஹவுதி செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் யாஹ்யா சரீ, “இஸ்ரேலின் அநியாயமான, அடக்குமுறையான நியாயமற்ற நடவடிக்கைகள் உலக நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதோடு, உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன” என்றும் கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments